Kathir News
Begin typing your search above and press return to search.

முதலீடு செய்ய உகந்த தலமாக இந்தியா திகழ்கிறது-தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு

உலக அளவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையிலும் முதலீடு செய்ய உகந்த தலமாக இந்தியா திகழ்கிறது என்று பெங்களூருவில் உலகத் தொழில் முதலீட்டாளர் மாநாட்டை தொடங்கி வைத்து பிரதமர் மோடி கூறினார்.

முதலீடு செய்ய உகந்த தலமாக இந்தியா திகழ்கிறது-தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு

KarthigaBy : Karthiga

  |  3 Nov 2022 9:45 AM GMT

கர்நாடக அரசின் தொழில் துறை சார்பில் உலக தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு பெங்களூரில் தொடங்கியது. பிரதமர் மோடி டெல்லியில் இருந்தபடி காணொளி மூலம் முதலீட்டாளர்கள் மாநாட்டை தொடங்கி வைத்து பேசியதாவது:-

கடந்த 2021 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு 6.72 லட்சம் கோடி அந்நிய நேரடி முதலீடுகள் வந்துள்ளன. இது கொரோனா பரவல் காரணமாக உலகம் முழுவதும் போர் நடைபெறுவது போன்ற சூழ்நிலையில் நடந்த சாதனையாகும். கொரோனா பரவல் மற்றும் உக்ரைன் போர் நடைபெறும் நிலையில் உலக அளவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது .பொருளாதார நெருக்கடியில் சிக்கி உள்ள உலக நாடுகள் பெரிய எதிர்பார்ப்புகளுடன் இந்தியாவை திரும்பிப் பார்க்கின்றன. உலக பொருளாதாரம் நிலையற்ற சூழலில் இருக்கும் போது இந்தியாவின் பொருளாதார அடித்தளம் வலுவாக இருப்பதாக உலக நாடுகள் நம்பிக்கை கொண்டுள்ளன. உலக சந்தை ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. ஆனால் நூற்று முப்பது கோடி இந்தியர்கள் பலமான உள்நாட்டு சந்தை உத்தரவாதம் அளிப்பதாக கருதுகிறார்கள்.


உலக பொருளாதாரத்தின் திறத்தன்மையால் இந்த நிலை ஏற்பட்டு இருக்கலாம். ஆனால் முதலீட்டாளர்கள், ஆய்வாளர்கள், பொருளாதார அறிஞர்கள் முதலீடு செய்ய உகந்த தலமாக இந்தியா இருப்பதாக கூறுகிறார்கள். இந்தியா தனது அடிப்படை கொள்கைகள் மூலம் தொடர்ந்து செயல்படுகிறது. அதனால் நாட்டின் பொருளாதாரம் வலுவானதாக மாறி இருக்கிறது. சமீபத்தில் நாங்கள் மேற்கொண்ட பொருளாதார வர்த்தக ஒப்பந்த முதலீடுகளை வரவேற்க நாங்கள் செய்துள்ள பணிகள் என்ன என்பதை உலக நாடுகளுக்கு காட்டுகிறது. கொரோனாவுக்கு பிறகு பெரிய அளவில் தற்போது முதலீட்டாளர்கள் மாநாடு நடக்கிறது. கடந்த எட்டு பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை நாடு சரியான பொருளாதார கொள்கை இல்லாமல் சிக்கலில் இருந்தது. இதில் நாட்டை விடுவிக்க மாற்றத்தை ஏற்படுத்த வேண்டி தேவை இருந்தது .இதன் மூலம் தேவையற்ற விதிமுறைகளை நீக்கி முதலீட்டாளர்களுக்கு சிவப்பு கம்பளை வரவேற்பு அளிக்கும் வகையில் கொள்கைகளை வகுத்தோம்.


அதாவது முதலீட்டாளர்களுக்கு சிவப்பு கம்பளை வரவேற்பு அளிக்கும் சூழலை ஏற்படுத்தி உள்ளோம். நாங்கள் குழப்பத்தை ஏற்படுத்தும் சட்டங்களை ஏற்றுவது தவிர்த்துவிட்டு நியாயமான சட்டங்களை நிறைவேற்றுகிறோம். நாங்களே அதாவது அரசே தொழில் செய்வதற்கு பதிலாக மற்றவர்கள் முன்வந்து தொழில் செய்வதற்கான நிலையை ஏற்படுத்தியுள்ளோம். இளைஞர்கள் தங்களின் திறனை அதிகரித்துக் கொள்ள நாங்கள் வாய்ப்பு வழங்கியுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.






Next Story
கதிர் தொகுப்பு
Trending News