Kathir News
Begin typing your search above and press return to search.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் இந்தியா முன்னிலை பெறுவது நிச்சயம்- பிரதமர் மோடி!

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் இந்தியா உலகில் முன்னிலை வகிக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் இந்தியா முன்னிலை பெறுவது நிச்சயம்- பிரதமர் மோடி!

KarthigaBy : Karthiga

  |  21 March 2024 2:07 PM GMT

தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற மாபெரும் புத்தாக்க நிறுவனங்கள் கண்காட்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி பேசியதாவது:-

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் என்ற புதிய சகாப்தத்தில் நாம் உள்ளோம். இந்த தொழில்நுட்பத்தில் இந்தியா முன்னிலை பெற்று வருவதை உலகம் அங்கீகரித்துள்ளது. இந்த வாய்ப்பை நாம் நழுவ விடக்கூடாது. உலக நாடுகள் எதிர்கொள்ளும் சவால்களுக்கு இந்தியா தீர்வளிக்கும் வகையில் இளம் தொழில் முனைவோரும் புத்தாக்க நிறுவனங்களும் செயலாற்ற வேண்டும்.


மத்திய அரசு அண்மையில் செயற்கை நுண்ணறிவு செமி கண்டக்டர் உற்பத்தி மற்றும் கணினி தொழில்நுட்ப மேம்பாடு என்ற மூன்று இயக்கங்களை அறிமுகம் செய்தது. இந்த மூன்று இயக்கங்களும் இளைஞர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கி தரும் என்பதோடு சர்வதேச முதலீட்டாளர்களுக்கு இந்தியாவில் முதலீடு செய்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்தித் தரும். இதில் செயற்கை நுண்ணறிவு இயக்கத்துக்காக மத்திய அமைச்சரவை ஏற்கனவே பத்தாயிரம் கோடி திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.


இதன் மூலம் நாட்டில் கணினி உள்கட்டமைப்பு மேம்படுத்தப்படும் என்பதோடு புத்தாக்க நிறுவனங்களின் ஆராய்ச்சிக்கும் ஆதரவு அளிக்கப்படும் மத்தியில் மூன்றாவது முறையாக பாஜக ஆட்சி அமையும் என்ற நம்பிக்கை உள்ளது. அந்த வகையில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் நாட்டில் என்ன நடக்கப்போகிறது என்பதை அனைவரும் அறிவீர்கள். 2014ல் நாட்டில் புத்தாக்க நிறுவனங்களின் எண்ணிக்கை 100க்கும் குறைவாக இருந்த நிலையில் தற்போது 1.25 இலட்சமாக அதன் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. இவற்றில் 45 சதவீதத்திற்கும் அதிகமான புத்தாக்க நிறுவனங்களுக்கு பெண்கள் தலைமை வகித்து வருகின்றனர்.


புத்தாக்க நிறுவனங்கள் மூலம் 12 லட்சம் இளைஞர்கள் நேரடியாக பயனடைந்து வருகின்றனர். உலகிலேயே மிக அதிக புத்தாக்க நிறுவனங்களைக் கொண்ட மூன்றாவது பெரிய நாடாக இந்தியா திகழ்கிறது. இவற்றில் நூறுக்கும் அதிகமான தனித்துவமான புத்தாக்க நிறுவனங்களும் இடம்பெற்றுள்ளன. விண்வெளித் துறையிலும் இந்திய புத்தாக்க நிறுவனங்கள் முன்னேற்றம் கண்டு வருகின்றன .இந்திய புத்தாக்க நிறுவனங்கள் இதுவரை பன்னிரண்டாயிரத்திற்கும் அதிகமான காப்புரிமைகளை பதிவு செய்துள்ளன. இருந்த போதும் பலர் இன்னும் காப்புரிமை பெறுவது முக்கியத்துவத்தை புரிந்து கொள்ளவில்லை.


உலகம் வேகமாக வளர்ந்து வரும் நிலையில் தொழில் முனைவோரும் புதிய கண்டுபிடிப்பாளர்களும் காப்பரிமை பெற விண்ணப்பிப்பது அவசியம் ஆகும் .வேலைக்கு செல்வதற்கு தான் படிப்பு. அரசு வேலைதான் சிறந்தது என்ற மனநிலை மாறி நாட்டில் புத்தாக்க நிறுவனங்களின் புரட்சி உருவாகி இருக்கிறது. வேலை தேடுபவர்களாக அல்லாமல் வேலை வாய்ப்பை உருவாக்குவார்களாக இளைஞர்கள் உருவாகி வருகின்றனர் என்றார் பிரதமர்.


SOURCE :Dinamani

Next Story
கதிர் தொகுப்பு
Trending News