உண்மை மற்றும் அகிம்சை கோட்பாடுகளை முன்னிறுத்தி உலகின் பிரச்சனைகளுக்கு தீர்வாக உள்ள இந்தியா- பிரதமர் மோடி!
உலகின் பிரச்சனைகளுக்கு தீர்வாக உள்ள உண்மை மற்றும் அகிம்சை கோட்பாடுகளை முன்னிறுத்துகிறது இந்தியா என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
By : Karthiga
மகாவீரர் ஜெயந்தியை ஒட்டி டெல்லியில் 2,550 ஆவது பகவான் மகாவீரர் நிர்வான் மகோத்சவத்தை பிரதமர் மோடி ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-
உலக அளவில் பல நாடுகள் போர்களில் சிக்கித் தவிக்கின்றன. இது போன்ற சூழலில் சமண தீர்த்தங்கரர்களின் போதனைகள் மிகப் பொருத்தமானதாகும். உலகின் பிரச்சனைகளுக்கு தீர்வாக சர்வதேச அரங்கில் உண்மை மற்றும் மகிழ்ச்சி கோட்பாடுகளை முழு நம்பிக்கையுடன் முன்னிறுத்துகிறது இந்தியா.இப் பிரச்சனைகளுக்கு நாட்டின் பண்டைய பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தில் தீர்வு இருப்பதாக உலகுக்கு உரக்கச் சொல்கிறோம் எனவேதான் பிளவுகளுக்கு இடையே உலகின் நண்பன் என தனக்கென ஒரு இடத்தை உருவாக்கியுள்ளது இந்தியா. தற்போதைய போர்க்காலகட்டத்தில் அமைதிக்கான தீர்வை இந்தியாவிடம் இருந்து ஒட்டுமொத்த மனித குலமும் எதிர்பார்க்கிறது.
பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்காக வாழ்வியல் இயக்கம், ஒரே பூமி ,ஒரே குடும்பம் ஒரே எதிர்காலம் ,சர்வதேச சூரிய சக்தி கட்டமைப்பு போன்ற முன் முயற்சிகள் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்தியா பழமையான நாகரீகத்தை கொண்ட நாடு மட்டுமல்ல மனித குலத்துக்கே புகலிடம். கடந்த 2014 - ஆம் ஆண்டில் நாடு விரக்தியில் மூழ்கி இருந்த நேரத்தில் மத்தியில் பாஜக அரசு அமைத்தது .அதன் பின்னர் பாரம்பரிய மற்றும் வலுவான வளர்ச்சியை மேம்படுத்தும் நடவடிக்கைகள் முடிக்கி விடப்பட்டன.யோகா ஆயுர்வேதம் போன்ற இந்திய பாரம்பரியங்கள் உலக அளவில் ஊக்குவிக்கப்பட்டன. இதனால் நாட்டின் பாரம்பரிய பெருமையே அதன் அடையாளம் என்று இப்போதைய தலைமுறையினர் உறுதியாக நம்புகின்றனர்.
SOURCE :Dinamani