Begin typing your search above and press return to search.
உலக மக்கள் தொகையில் இந்தியா முதலிடம் - சீனாவை பின்னுக்கு தள்ளியது
உலக மக்கள் தொகையில் சீனாவை பின்னுக்கு தள்ளிவிட்டு இந்தியா முதல் இடத்துக்கு வந்துள்ளது என ஐ.நா மக்கள் தொகை நிதியம் அறிவித்துள்ளது.
By : Karthiga
இந்தியாவின் மக்கள் தொகை 142.86 கோடி சீனாவின் மக்கள் தொகை 142.57 கோடி என தெரிவித்துள்ளது. இது குறித்து நிருபர்களிடம் பேசிய சீன வெளியுறவு துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் வாங் வென் பின்னிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்து அவர் கூறியதாவது:-
மக்கள் தொகை பங்களிப்பு அளவை சார்ந்ததல்ல. அது தரத்தைச் சார்ந்தது. மக்கள்தொகை முக்கியம். அதேபோன்றுதான் திறமையும். சீனாவின் மக்கள் தொகை 140 கோடியை தாண்டும். தரமான பணியாளர் வர்க்கத்தினர் 90 கோடி பேர் இருக்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
Next Story