இந்திய கடற்படைக்கு 24,400 கோடியில் நவீன 'டிரோன்கள்'- அமெரிக்காவிடமிருந்து வாங்க இந்தியா நடவடிக்கை
அமெரிக்காவிடமிருந்து ரூபாய் 24,400 கோடியில் பிரிடேட்டர் வகை அதிநவீன டிரோன்கள் வாங்கும் செயல்முறையில் இந்தியா ஈடுபட்டு வருவதாக கடற்கரை தளபதி ஹரிகுமார் தெரிவித்தார்.
By : Karthiga
இந்திய கடற்படை தளபதி ஆர். ஹரிகுமார், டெல்லியில் நேற்று நிருபர்களுக்கூ பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அமெரிக்காவில் இருந்து '30 எம்.கியூ, 9 பி பிரிடேட்டர் ஆயுத 'டிரோன்'களை மூன்று பில்லியன் டாலர் விலை கொடுத்து வாங்க இந்தியா முடிவு செய்துள்ளது. இந்த டிரோன்களை வாங்குவதற்கான செயல்முறை நடந்து வருகிறது. குத்தகைக்கு எடுக்கப்பட்ட டிரோன்களை பயன்படுத்தி எங்களுக்கு நல்ல அனுபவம் கிடைத்துள்ளது. இந்திய பெருங்கடல் பகுதியில் நிறைய சீனகப்பல்கள் இயங்கி வருகின்றன. கடற்படையில் நான்கு அல்லது ஆறு கப்பல்களும் சில ஆராய்ச்சி கப்பல்களும் செயல்பாட்டில் உள்ளன. இந்திய பெருங்கடல் பகுதியில் நிறைய சீன மீன் பிடி கப்பல்களும் இயங்கி வருகின்றன. இவற்றையெல்லாம் நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம். இந்திய கடற்பகுதி பாதுகாப்பு பற்றி கேட்கிறீர்கள். கிட்டத்தட்ட 60 பிற கூடுதல் பிராந்தியப்படைகள் அந்த பிராந்தியத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளன. இது ஒரு முக்கியமான பிராந்தியம் என்பதை நாங்கள் அறிவோம். அதிக அளவிலான வர்த்தக போக்குவரத்து மற்றும் எரிசக்தி ஓட்டம் நடைபெறும் பகுதி.
இது கடல்சார் களத்தில் இந்தியாவின் நலன்கள் பாதுகாக்கப்படுவதை கவனிப்பதுதான் எங்கள் வேலை ஆகும். இந்திய கடற்படையின் தற்சார்புநிலை குறித்து மத்திய அரசு எங்களுக்கு வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. நாங்களும் 20047 ஆம் ஆண்டுகள் தற்சார்பு நிலையை அடைந்து விடும் என்ற உறுதி முடியை எடுத்துள்ளோம் இந்திய கடற்படையில் 3 ஆயிரம் அக்னி வீரர்கள் வந்து சேர்ந்துள்ளனர் அவர்களின் 341 பேர் பெண்கள் அவர் முதல் முறையாக நாங்கள் கடற்படையில் பெண் ஆளுமைகளை சேர்த்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.