வளர்ச்சி பாதையில் இந்தியா - தனது வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடத்தையும் ஏழைகளின் நலனுக்காகவே அர்ப்பணித்து வரும் மோடி
நவீனத்தை விரும்பும் இளைய தலைமுறையினர் பாரம்பரியத்தையும் ஏற்க வேண்டும் என விஸ்வகர்மா திட்ட தொடக்க விழாவில் மத்திய மந்திரி பூபேந்திர யாதவ் பேசினார்.

பாரம்பரிய கைவினை கலைஞர்களை அங்கீகரிக்கும் வகையில் ரூபாய் 13,000 கோடி மதிப்பீட்டில் பிரதம மந்திரி விஸ்வகர்மா திட்டத்தை பிரதமர் மோடி டெல்லியில் நேற்று தொடங்கி வைத்தார். ஒவ்வொரு மாநிலங்களிலும் மத்திய மந்திரிகள் மற்றும் இணை மந்திரிகள் திட்டத்தை தொடங்கி வைத்தனர் .சென்னை அடையாறில் நடந்த நிகழ்ச்சியில் விஸ்வகர்மா திட்டத்தை மத்திய தொழிலாளர் மற்றும் சுற்றுச்சூழல் துறை மந்திரி பூபேந்திர யாதவ் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார் . இயக்குனர் ஆர் தங்கமணி வருமானவரித்துறை இணை கமிஷனர் பி.நந்தகுமார் ,மீனன், தமிழக அரசின் தொழிலாளர் நலத்துறை இணை இயக்குனர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் விழாவில் மத்திய மந்திரி பூவேந்திர யாதவ் பேசியதாவது:-
பிரதமர் தனது வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடத்தையும் ஏழைகளின் நலனுக்காகவே அர்ப்பணித்து வருகிறார். ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக ஒலித்து வருகிறார்.அவரது தலைமையின் கீழ் உள்நாட்டு வளர்ச்சியை எட்டிய நிலையில் உலக அளவில் இந்தியா வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருக்கிறது .அந்த அர்ப்பணிப்பும் உழைப்பும் தான் ஜி20 மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி இன்று இந்தியா உலக நாடுகளை திரும்பிப் பார்க்கச் செய்துள்ளது.
நரேந்திர மோடியின் பிறந்த நாளில் இந்த விஸ்வகர்மா திட்டத்தை தொடங்குவது சிறப்புக்குரியது. இதன் மூலம் கலை மற்றும் கைவினை கலைஞர்கள் பெரும் பயனடைவார்கள். பெரும் சிறப்புகளை கொண்ட தமிழ் பண்பாட்டை பேணிக்காவதில் பிரதமர் நரேந்திர மோடி முக்கியத்துவம் கொண்டுள்ளார். தமிழக பெருமை சொல்லும் செங்கோலினை புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் இடம்பெறச் செய்துள்ளார் . நேர்மறை எண்ணம், விடாமுயற்சி, முன்னேற்றம் இது கலைஞர்களின் வாழ்க்கையில் சாத்தியமாக வேண்டும் .
தமிழகத்தின் தலைநகரான சென்னை கலாச்சாரங்களின் வடிவமாகவே திகழ்ந்து வருகிறது . இந்த விஸ்வகர்மா திட்டத்தின் மூலம் தச்சர், கொல்லர், சிற்பி உள்ளிட்ட கலைஞர்கள் வாழ்வாதாரம் காண்பார்கள் . எனவே இந்த திட்டத்தில் கலைஞர்கள் அதிக அளவில் சேர்ந்து பயனடைய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். விழாவில் டெல்லியில் இருந்து விஸ்வகர்மா திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்து பேசும் காட்சி காணொலி மூலம் ஒளிபரப்பப்பட்டது.
SOURCE :DAILY THANTHI