Kathir News
Begin typing your search above and press return to search.

ஆப்கானிஸ்தானுக்கு கருணை காட்டும் இந்தியா: 50 ஆயிரம் மெட்ரிக் டன் கோதுமை, மருத்துவ பொருட்கள் வழங்கப்படுகிறது!

ஆப்கானிஸ்தானில் உணவு பஞ்சம் ஏற்பட்டுள்ளதை அறிந்து, 50 ஆயிரம் மெட்ரிக் டன் கோதுமை மற்றும் மருத்துவ உபகரணங்களை இந்தியா நன்கொடையாக வழங்குவதற்கு திட்டமிட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானுக்கு கருணை காட்டும் இந்தியா: 50 ஆயிரம் மெட்ரிக் டன் கோதுமை, மருத்துவ பொருட்கள் வழங்கப்படுகிறது!
X

ThangaveluBy : Thangavelu

  |  19 Oct 2021 1:08 PM GMT

ஆப்கானிஸ்தானில் உணவு பஞ்சம் ஏற்பட்டுள்ளதை அறிந்து, 50 ஆயிரம் மெட்ரிக் டன் கோதுமை மற்றும் மருத்துவ உபகரணங்களை இந்தியா நன்கொடையாக வழங்குவதற்கு திட்டமிட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி தாலிபான் பயங்கரவாதிகள் ஆட்சியை பிடித்தனர். இதனிடையே இந்தியாவின் உறவை பொருட்படுத்தாமல் ஆப்கானிஸ்தான் மக்களுக்காக தடையற்ற மற்றும் மனிதாபிமான முறையில் உதவிகள் செய்யப்படும். ஆப்கானிஸ்தான் மக்களுடனான பாரம்பரிய நட்பு உறவு மற்றும் அணுகுமுறையை தொடர்ந்து சுமூகமாக வழிநடத்தும் என்றும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

தாலிபான்கள் நாட்டை கைப்பற்றிய நிலையில் ஆப்கானிஸ்தானுக்கு சர்வதேச நாடுகள் உதவி செய்வதற்கு மறுத்து வருகின்றது. ஆனாலும் இந்தியா மனிதாபமான முறையில் உதவிகளை செய்ய முன்வந்துள்ளது உலக நாடுகள் பாராட்டை பெற்று வருகிறது குறிப்பிடத்தக்கது.

Source, Image Courtesy: Dinamalar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News