இந்தியா - சிங்கப்பூர் - தாய்லாந்து கடற்படை கூட்டு பயிற்சி! சீனாவுக்கு செக்!
இந்தியா - சிங்கப்பூர் - தாய்லாந்து கடற்படை கூட்டு பயிற்சி! சீனாவுக்கு செக்!
By : Kathir Webdesk
வருகின்ற 2020 ஆம் ஆண்டு முதல் இந்தியா சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து
இடையே கூட்டு கடற்படை பயிற்சி நடைபெறுவதற்கான ஒப்பந்தம்
கையெழுத்திடப்பட்டது. சமீபத்தில் இந்திய கத்தார் நாடுகள் இணைந்து போர்
பயிற்சியில் ஈடுபடத்தை தொடர்ந்து இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகி
இருக்கிறது. இந்திய பெருங்கடல் பகுதியில் சீனாவின் ஆதிக்கம் தடுக்க
முடியாத அளவிற்கு அதிகரித்து வருகிறது.
2008 இல் "பேர்ல் கார்லண்ட்" என்ற திட்டத்தின் அடிப்படையில் இந்தியாவை சுற்றி ஒரு வளையம் போல கடல்
வழியாக தன நிலைகளை ஒவொவ்ரு நாட்டிலும் ஏற்படுத்தியது. அதன் பிறகு
பிரதமர் மோடி பதவி ஏற்ற பிறகு இந்தியாவின் ஆதிக்கத்தை இந்திய
கடற்பகுதியில் நிலை நிறுத்துவதற்க்காக "லுக் ஈஸ்ட் ": (கிழக்கு நோக்கிய
கவனம்) என்ற கோட்பாட்டுடன் தென் கிழக்கு ஆசிய நாடுகளுடன் பல
ஒப்பந்தங்களை ஏற்படுத்தியது, தென் கிழக்கு ஆசிய நாடுகள் கட்டுப்பட்டு
இருக்கும் கடல் வழித்தடங்கள் இந்தியாவிற்கு எதிராக பயன்படுத்த வாய்ப்பு
தராத அளவிற்கு பார்த்துக்கொள்ளப்பட்டது.
இந்திய சிங்கப்பூர் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே ஆன ராணுவ
அமைச்சர்கள் கலந்து கொள்ளும் நான்காவது கட்ட பேச்சு வார்த்தையில் இந்த
முடிவு எடுக்கப்பட்டது. இந்தியாவின் சார்பாக அமைச்சர் ராஜ்நாத் சிங்கும்
சிங்கப்பூரின் சார்பாக நாக் எங் ஹென் ம் இந்த பேச்சு வார்த்தையில் கலந்து
கொண்டனர்.
அந்தமான் கடற் பகுதியில் நாடாகும் இந்த கூட்டு பயிற்சியின் நோக்கம் இந்திய
பசிபிக் கட்டிட பரப்பில் பாதுகாப்பை உறுதி செய்வது மேலும் மூன்று
நாடுகளுக்கான கடல் வழி தகவல் தொடர்புகள் எந்த விதத்திலும் பாதிக்காத
வண்ணம் ஒத்துழைப்பது, மேலும் இந்த பகுதியில் உள்ள மற்ற நாடுகளின்
முன்னேற்றம் மற்றும் பாதுகாப்பிற்கு உறுதுணையாக இருப்பதும் இந்த மூன்று
நாடுகளின் கூட்டு பயிற்சின் நோக்கமாகும்