Kathir News
Begin typing your search above and press return to search.

இதென்ன காங்கிரஸ் ஆட்சினு நெனப்பா ? பாகிஸ்தானிலிருந்து பொய்ச் செய்திகளைப் பரப்பும் அமைப்புகள் மீது இந்தியா காட்டிய நடவடிக்கை!

India strikes hard on Pakistani Fake News Factories

இதென்ன காங்கிரஸ் ஆட்சினு நெனப்பா ? பாகிஸ்தானிலிருந்து பொய்ச் செய்திகளைப் பரப்பும் அமைப்புகள் மீது இந்தியா காட்டிய நடவடிக்கை!

MuruganandhamBy : Muruganandham

  |  23 Jan 2022 3:01 AM GMT

டிஜிட்டல் ஊடகங்கள் வாயிலாக இந்தியாவுக்கு எதிராக திட்டமிட்டு பொய்ச் செய்திகளைப் பரப்பும் 35 யுடியூப் அலைவரிசைகள், 2 இணையதளங்களை தடை செய்ய மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

பாகிஸ்தானிலிருந்து செயல்படும் இந்த யுடியூப் அலைவரிசைகள் 1 கோடியே 20 லட்சத்திற்கும் மேற்பட்ட சந்தாதாரர்களையும், 130 கோடிக்கும் மேற்பட்ட பார்வையாளர்களையும் கொண்டவையாகும். மேலும், இணையதளத்தில் இந்தியாவுக்கு எதிரான அவதூறு தகவல்களை பரப்பும் செயலில் ஈடுபட்டுள்ள 2 டுவிட்டர் கணக்குகள், 2 இன்ஸ்டாகிராம் கணக்குகள் மற்றுமொரு முகநூல் கணக்கும் மத்திய அரசால் தடை செய்யப்பட்டுள்ளது.

தகவல் தொழில்நுட்ப சட்டம் 2021, விதி 16-ன் கீழ் இதற்கான 5 உத்தரவுகளை மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் தனித்தனியாக பிறப்பித்துள்ளது. இந்த சமூக ஊடகங்கள் மற்றும் இணையதளங்களை இந்திய புலனாய்வு அமைப்புகள், உன்னிப்பாக கண்காணித்து, உடனடி நடவடிக்கை எடுக்குமாறு அளித்த பரிந்துரையின் பேரில் மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம், பாகிஸ்தானிலிருந்து செயல்படும் இந்த சமூக ஊடகங்களை தடை செய்துள்ளது.

இவற்றில் சில யுடியூப் அலைவரிசைகள் பாகிஸ்தான் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர்கள் மற்றும் தொகுப்பாளர்களால் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது. அமைச்சகத்தால் தடுக்கப்பட்ட யூடியூப் சேனல்கள், இணையதளங்கள் மற்றும் பிற சமூக ஊடக கணக்குகள், இந்தியா தொடர்பான முக்கியமான விஷயங்களைப் பற்றி இந்தியாவுக்கு எதிரான போலிச் செய்திகளைப் பரப்புவதற்காக பாகிஸ்தானால் பயன்படுத்தப்பட்டது.

இந்திய ராணுவம், ஜம்மு காஷ்மீர் மற்றும் பிற நாடுகளுடனான இந்தியாவின் வெளிநாட்டு உறவுகள் போன்ற தலைப்புகள் இதில் அடங்கும். முன்னாள் பாதுகாப்புப் படைத் தலைவர் மறைந்த ஜெனரல் பிபின் ராவத்தின் மறைவு குறித்து யூடியூப் சேனல்கள் மூலம் பரவலான போலிச் செய்திகள் பரப்பப்படுவது கவனிக்கப்பட்டது. இந்த யூடியூப் சேனல்கள் ஐந்து மாநிலங்களில் நடக்கவிருக்கும் தேர்தல்களின் ஜனநாயக செயல்முறையை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் வகையில் உள்ளடக்கத்தை வெளியிடத் தொடங்கியுள்ளன.

சேனல்கள் பிரிவினைவாதத்தை ஊக்குவிப்பதற்கும், இந்தியாவை மதத்தின் அடிப்படையில் பிளவுபடுத்துவதற்கும், இந்திய சமூகத்தின் பல்வேறு பிரிவினரிடையே பகைமையை உருவாக்குவதற்கும் பிரச்சாரம் செய்தன. இதுபோன்ற தகவல்கள், நாட்டில் பொது ஒழுங்கை மோசமாக பாதிக்கும் குற்றங்களில் ஈடுபட பார்வையாளர்களை தூண்டும் சாத்தியம் இருப்பதாக அஞ்சப்படுகிறது.

இந்தியாவின் ஒட்டுமொத்த தகவல் சூழலைப் பாதுகாப்பதற்காக உளவுத்துறை அமைப்புகளும் அமைச்சகமும் தொடர்ந்து உன்னிப்புடன் செயல்பட்டு வருகின்றன.



Next Story
கதிர் தொகுப்பு
Trending News