Kathir News
Begin typing your search above and press return to search.

மாலத்தீவு தூதருக்கு கடும் கண்டனம் விதித்த இந்தியா!

பிரதமர் மோடியின் லட்சத்தீவு பயணம் குறித்து மாலத்தீவு மந்திரிகள் மூன்று பேர் விமர்சித்த விவகாரம் தொடர்பாக அந்த நாட்டு தூதரை அழைத்து இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

மாலத்தீவு தூதருக்கு கடும் கண்டனம் விதித்த இந்தியா!

KarthigaBy : Karthiga

  |  9 Jan 2024 5:45 AM GMT

பிரதமர் மோடி சமீபத்தில் லட்சத்தீவு சென்றார். அங்கி அவர் ஆழ்கடல் நீச்சல் பயிற்சியில் ஈடுபட்டார். இது தொடர்பான புகைப்படங்களை அவர் தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டிருந்தார் இதனை மாலத்தீவை சேர்ந்த சில அரசியல்வாதிகள் மிகவும் கீழ்த்தரமாக விமர்சித்து இருந்தனர். இதில் அந்த நாட்டைச் சேர்ந்த மந்திரிகள் மல்ஷா ஷரீப், மரியம் சியூனா மற்றும் அப்துல்லா மசூம் மஜீத் ஆகியோரும் அடங்குவர்.


இதற்கு அந்த நாட்டின் முன்னால் அதிபர்கள் முகமது நசீத் ,இப்ராஹிம், முகமது சோலிக் மற்றும் பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்தனர். மூன்று மந்திரிகளின் கருத்துகளால் இந்தியா மாலத்தீவு இடையே நல்லுறவு பாதிக்கும் சூழல் ஏற்பட்டது. இது அந்த நாட்டு அதிபர் முகமது முய்சுவுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியது. இதை அடுத்து சம்பந்தப்பட்ட மூன்று மந்திரிகளை இடைநீக்கம் செய்து மாலத்தீவு அரசு நடவடிக்கை எடுத்தது.


இந்த நிலையில் மாலத்தீவில் உள்ள இந்திய தூதரக அதிகாரி, மாலத்தீவு தூதரக அதிகாரி மற்றும் வெளியுறவு அதிகாரிகளை சந்தித்து இந்த விவகாரம் குறித்து பேசினார். அப்போது பிரதமர் மோடி குறித்து வெளியான தரக்குறைவான கருத்துக்கள் மாலத்தீவு அரசின் கருத்து அல்ல. அது தனிப்பட்டவர்களின் கருத்து. இதில் சம்பந்தப்பட்ட மூன்று அமைச்சர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவித்தனர். மேலும் இது தொடர்பாக அறிவிக்கை ஒன்றையும் வெளியிட்டனர். இந்த நிலையில் இந்திய வெளி விவகாரத்துறை அமைச்சகம் டெல்லியில் உள்ள மாலத்தீவின் தூதர் இப்ராஹிம் சாஹிப்பை நேரில் அழைத்து பிரதமர் மோடிக்கு எதிராக மாலத்தீவின் பல மந்திரிகள் சமூக ஊடகங்களில் பதிவிட்ட கருத்துக்கள் குறித்து கடுமையான கண்டனத்தை தெரிவித்தார்.


SOURCE :DAILY THANTHI



Next Story
கதிர் தொகுப்பு
Trending News