Kathir News
Begin typing your search above and press return to search.

ககன்யான் திட்டத்திற்காக லைஃப் சப்போர்ட் அமைப்பை சுயமாக உருவாக்கும் இந்தியா- இஸ்ரோ தகவல்!

ககன்யான் திட்டத்திற்காக இஸ்ரோ சுயமாக லைப் சப்போர்ட் அமைப்பை உருவாக்க உள்ளது.மற்ற நாடுகள் யாரும் அதை இந்தியாவிற்கு கொடுக்க தயாராக இல்லை என்பதால் இஸ்ரோ சுயமாக இதை உருவாக்க உள்ளது.

ககன்யான் திட்டத்திற்காக லைஃப் சப்போர்ட் அமைப்பை சுயமாக உருவாக்கும் இந்தியா- இஸ்ரோ தகவல்!

KarthigaBy : Karthiga

  |  23 Dec 2023 1:48 AM GMT

இஸ்ரோ , சந்திரயான்-3 வெற்றியைத் தொடர்ந்து ஆதித்யா எல்-1 ஐ வெற்றிகரமாக ஏவியது. தொடர்ந்து அடுத்தடுத்த வெற்றிகள் மூலம் உலக நாடுகளை திரும்பிப் பார்க்க வைத்தது. அடுத்ததாக மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தில் கவனம் செலுத்தி வருகிறது இதற்கான லைஃப் சப்போட்டை உலக நாடுகள் உதவ மறுத்ததால் இந்தியாவே சுயமாக உருவாக்குவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


அமெரிக்காவின் நாசா உள்ளிட்ட விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்கள் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பி சாதனை படைத்து இருக்கிறது. அதேபோல் ஸ்பேஸ் எக்ஸ் போன்ற தனியார் நிறுவனங்களும் விண்ணுக்கு மனிதர்களை அனுப்ப திட்டமிட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது இஸ்ரோவும் விண்ணுக்கு மனிதர்களை அனுப்ப முடிவெடுத்து உள்ளது.


இந்த திட்டத்தின் மூலம் 3 பேரை விண்ணுக்கு அனுப்ப மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த திட்டம் மூலம் 3 பேர் ஏழு நாட்கள் விண்ணில் இருப்பார்கள். ஏழு நாட்கள் அவர்கள் விண்ணில் ஆராய்ச்சி செய்ய இருக்கிறார்கள். யாரை விண்ணுக்கு அனுப்ப போகிறார்கள் என்பது குறித்தும் இவர்கள் இன்னும் முடிவு செய்யவில்லை. இதற்கான தேர்வுதான் தற்போது பெங்களூரில் நடந்து வருகிறது. இந்த தேர்வுக்கான புகைப்படத்தை தற்போது இந்திய விமானப்படை வெளியிட்டுள்ளது.


இந்திய விமானப்படை வீரர்களுக்கு இதில் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான மருத்துவ சோதனை தற்போது நடந்து வருகிறது. ககன்யான் திட்டத்திற்காக இஸ்ரோ சுயமாக லைப் சப்போர்ட் அமைப்பை உருவாக்க உள்ளது. மற்ற நாடுகள் யாரும் அதை இந்தியாவிற்கு கொடுக்க தயாராக இல்லை என்பதால் இஸ்ரோ சுயமாக இதை உருவாக்க உள்ளது. விண்வெளியில் இருக்க ஆக்சிஜன் வழங்க கூடிய, பாதுகாப்பு மாஸ்க் அடங்கிய லைப் சப்போர்ட் அவசியம். இந்த லைப் சப்போர்ட்டை அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட நாடுகள் இந்தியாவிற்கு வழங்க மறுத்துவிட்டது. இதனால் இந்தியா சுயமாக இதை உருவாக்க உள்ளது. இதற்கான இறுதிக்கட்ட ஆராய்ச்சிகளை தற்போது இஸ்ரோ மேற்கொண்டு வருகிறது.


மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் பட்சத்தில் எஸ்கேப் பேட் மூலம் அவர்களை பூமிக்கு மீண்டும் கொண்டு வர வேண்டும். அதாவது ராக்கெட்டின் கூம்பில் இந்த எஸ்கேப் பேட் இருக்கும். இது மீண்டும் விண்வெளி வீரர்களை சுமந்து கொண்டு பூமிக்கு திரும்பும். அதன்படி 2-3 வாரங்களில் ககன்யான் பயணத்தின் குழு தப்பிக்கும் சோதனையை இஸ்ரோ நடத்த உள்ளது. மூன்று நாள் பயணத்திற்காக மூன்று விண்வெளி வீரர்களை விண்வெளிக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்டு இந்த சோதனை நடத்தப்பட உள்ளது. இதன் மூலம் குறிப்பிட்ட தூரத்திற்கு இந்த எஸ்கேப் பேட் கொண்டு செல்லப்பட்டு அதன் பின் பூமிக்கு வெற்றிகரமாக மீண்டும் கொண்டு வரப்படும்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News