Kathir News
Begin typing your search above and press return to search.

உலக டெஸ்ட் போட்டி தரவரிசையில் இந்தியா முதலிடம்!!

உலக டெஸ்ட் போட்டி தரவரிசையில் இந்தியா முதலிடம்!!

உலக டெஸ்ட் போட்டி தரவரிசையில் இந்தியா முதலிடம்!!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  9 Oct 2019 6:27 AM GMT


விசாகப்பட்டினத்தில் தற்போது நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில் வென்றதன் மூலம் உலக டெஸ்ட் போட்டி தரவரிசையில் இந்தியா அணி முதலிடத்தை பெற்றுள்ளது.


இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. அந்த போட்டியில் இந்தியா அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அப்போட்டியின் இரண்டு இன்னிங்சிலும் சதமடித்த ரோகித் சர்மா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது .


இந்த டெஸ்ட் தொடர் உலக டெஸ்ட் போட்டிகளில் உட்பட்டது. இந்தியா முதல் டெஸ்ட்யில் வென்றதன் மூலம் 40 புள்ளிகள் கிடைத்துள்ளது.


இந்நிலையில், உலக டெஸ்ட் போட்டி தரவரிசையில் இந்திய அணி 160 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஆரம்பித்து இந்திய 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி மூன்றிலும் வெற்றி பெற்றதால் முதலிடத்தில் உள்ளது.


மேலும்,அந்த தரவரிசையில் நியூசிலாந்து மற்றும் இலங்கை அணி தலா 60 புள்ளிகளுடன் அடுத்த இடத்தில் உள்ளது.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News