Kathir News
Begin typing your search above and press return to search.

உலக டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பட்டியலில் இந்தியா வீரர்கள் அபார முன்னிலை!!

உலக டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பட்டியலில் இந்தியா வீரர்கள் அபார முன்னிலை!!

உலக டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பட்டியலில் இந்தியா வீரர்கள் அபார முன்னிலை!!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  9 Oct 2019 7:43 AM GMT


விசாகப்பட்டினத்தில் தற்போது தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. டெஸ்ட் போட்டியில் வீரர்கள் செயல்பாட்டின் அடிப்படையில் ஐ.சி.சி புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.


டெஸ்ட் பேட்ஸ்மேன்:-


இதன்படி டெஸ்ட் பேட்ஸ்மேன்களின் தரவரிசை பட்டியலில்
ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் சுமித் 937 புள்ளிகளுடன் முதலாவது இடத்திலும், விராட் கோலி 899 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.


டெஸ்டின் இரண்டு இன்னிங்சிலும் சதம் (176 ரன், 127 ரன்) அடித்தது மட்டும் இல்லாமல் 13 சிக்சர்களை
விளாசி உலக சாதனை படைத்தார் இந்திய தொடக்க வீரர் ரோகித் சர்மா அவர் 36 இடத்தில் இருந்து 17-வது இடத்தை பிடித்துள்ளார் மேலும் இரட்டை செஞ்சுரி அடித்து மயங்க் அகர்வால் 63-வது இடத்தில் இருந்து 25-வது இடத்தை பிடித்துள்ளார்.


டெஸ்ட் பந்து வீச்சாளர்:-


பந்து வீச்சாளர்களின் தரவரிசை பட்டியலில் ஆஸ்திரேலியாவின் கம்மின்ஸ் 908 புள்ளிகளுடன் முதலாவது இடத்தில் உள்ளார். விசாகப்பட்டினத்தில் நடந்த டெஸ்டில் மொத்தம் 8 விக்கெட்டுகளை கைப்பற்றிய அஸ்வின் 4 இடங்கள் முன்னேறி மீண்டும் டாப்-10 இடத்திற்குள் நுழைந்தார். மேலும் அவர் டெஸ்டில் அதிவேகமாக 350 விக்கெட்களை வீழ்த்தி முரளிதரனின் சாதனையை சமன் செய்தார். அவர் தற்போது 10-வது இடத்தில் உள்ளார் .


இரண்டாவது இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றிய இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி 2 இடம் முன்னேறி 710 புள்ளிகளுடன் 16-வது இடத்தை பிடித்துள்ளார்.


டெஸ்ட் ஆல்-ரவுண்டர்:-


டெஸ்ட் ஆல்-ரவுண்டர்களின் தரவரிசை பட்டியலில் வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஜாசன் ஹோல்டர் முதலிடத்தில் இருக்கிறார். இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா 3-வது இடத்தில் இருந்து முன்னேறி 2-வது இடத்தை பிடித்துள்ளார்.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News