Kathir News
Begin typing your search above and press return to search.

காலசக்கரத்தின் சுழற்சியால் உலகுக்கு பல முன் உதாரணங்களை நிர்ணயித்த இந்தியா- பெருமிதத்துடன் மோடி!

உலக நாடுகளுக்கெல்லாம் பல முன் உதாரணங்களை நிர்ணயிக்கும் வகையில் இந்தியா வளர்ச்சி அடைந்துள்ளது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

காலசக்கரத்தின் சுழற்சியால் உலகுக்கு பல முன் உதாரணங்களை நிர்ணயித்த இந்தியா- பெருமிதத்துடன் மோடி!

KarthigaBy : Karthiga

  |  20 Feb 2024 11:22 AM GMT

உலகுக்கு பல முன் உதாரணங்களை இந்தியா நிர்ணயிக்கும் வகையில் காலச்சக்கரம் சுழன்றுள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்தார். மேலும் கடவுள் ஸ்ரீராமர் ஆட்சி செய்த போது அவருடைய செல்வாக்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகள் நீடித்தது. அதுபோல அயோத்தியில் பாலராமர் அரியணை ஏறியுள்ள நிலையில் அடுத்த 1000 ஆண்டுகளுக்கான இந்தியாவின் புதிய பயணம் தொடங்கியுள்ளது என்று பிரதமர் குறிப்பிட்டார். உத்திரபிரதேசம் மாநிலம் சம்பல் நகரில் ஸ்ரீ கல்கி தாம் கோயில் கட்டப்படவுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. விழாவில் பங்கேற்று கோயிலுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி பின்னர் பேசியதாவது:-


அயோத்தியில் ராமர் கோயில் மூலவர் பிரதிஷ்டை செய்யப்பட்ட நாளான ஜனவரி 22-ஆம் தேதி நாட்டுக்கான புதிய கால சக்கரம் சுழல தொடங்கியது. கடவுள் ஸ்ரீ ராமர் ஆட்சி செய்த போது அவருடைய செல்வாக்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகள் நீடித்தது. அதுபோல அயோத்தியில் பாலராமர் அரியணை ஏரி உள்ள நிலையில் அடுத்த 1000 ஆண்டுகளுக்கான இந்தியாவின் புதிய பயணம் தொடங்கியுள்ளது. தற்போது இந்தியா என்ற கோயிலை மீண்டும் கட்டும் பணியை கடவுள் எனக்கு பணித்துள்ளார். ஒருபுறம் நமது புனித தலங்கள் மறு சீரமைக்கப்பட்டு வரும் நிலையில், மறுபுறம் நகரங்கள் நவீன உள்கட்டமைப்பு வசதிகளை பெற்று வருகின்றன.


கோவில்கள் கட்டப்பட்டு வரும் நேரத்தில் நாடு முழுவதும் புதிய மருத்துவக் கல்லூரிகளும் கட்டப்படுகின்றன .நமது பழங்கால சிற்பங்கள் வெளிநாடுகளில் இருந்து மீட்டுக் கொண்டுவரப்படும். அதே வேளையில் சாதனை அளவில் வெளிநாட்டு முதலீடுகளும் இந்தியாவுக்கு வருகின்றன. கால சக்கரம் இந்தியாவுக்கு சாதகமாக சுழன்றுள்ளது. புதிய சகாப்தம் நமது கதவுகளை தட்டுகின்றன என்பதற்கான சாட்சி தான் இந்த மாற்றங்கள் .முதன் முறையாக பிறரை பின்பற்றும் நாடாக அல்லாமல் பல முன் உதாரணங்களை உலகுக்கு நிர்ணயம் செய்யும் நிலைக்கு இந்தியா உயர்ந்துள்ளது. முதன்முறையாக தொழில்நுட்பம் மற்றும் எண்ம தொழில்நுட்பத் துறைகளில் சாத்தியக்கூறுகளின் மையமாக இந்தியா பார்க்கப்படுகிறது .


புதிய கண்டுபிடிப்புகளின் மையமாக இந்தியா அங்கீகரிக்கப்பட்டுள்ளது. உலகின் ஐந்தாவது மிகப்பெரிய பொருளாதார நாடாக நாம் உருவெடுத்துள்ளோம் . முதல் நாடாக நிலவின் தென் துருவத்தை அடைந்து சாதனை படைத்துள்ளோம். நாட்டின் 500 ஆண்டு கால காத்திருப்பு அயோத்தி ராமர் கோயில் மூலவர் பிரதிஷ்டை நிகழ்வு மூலம் கடந்த மாதம் 22-ஆம் தேதி முடிவுக்கு வந்தது. அதனைத் தொடர்ந்து அரபு மண்ணில் அபுதாபியில் மிகப்பெரிய ஹிந்து கோயிலில் திறந்து வைக்கப்பட்டது .இதே காலகட்டத்தில் தான் வாரணாசி காசி விஸ்வநாதர் கோயில் புத்துயிர் பெற்றது. சோமநாத் கோயில் மற்றும் கேதார்நாத் கோயில் மறு சீரமைப்பையும் நாம் பார்த்தோம். அந்த வகையில் நாம் பாரம்பரிய மாறாத வளர்ச்சி மந்திரத்தை கடைபிடித்து வருகிறோம்.


நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக நமது நாடு பலமுறை தாக்குதல்களுக்கு உள்ளானது. பல தொடர்ச்சியான தாக்குதல்களை சந்தித்தது வேறு எந்த நாடாக இருந்தாலும் அவற்றால் முற்றிலுமாக அழிந்து போயிருக்கும். ஆனால் இந்தியா அனைத்து தாக்குதல்களையும் தாங்கிக்கொண்டது மட்டுமின்றி மேலும் வலுவாக மீண்டெழுந்தது. அந்த வகையில் தோல்வியிலிருந்தும் வெற்றியை மீட்டெடுக்கும் நாடாக இந்தியா திகழ்கிறது. இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.


SOURCE :varalaru

Next Story
கதிர் தொகுப்பு
Trending News