Kathir News
Begin typing your search above and press return to search.

மீண்டும் மோடி ஆட்சி அமைந்தால் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறும் - பா.ஜ.க தலைவர் அண்ணாமலை!

மூன்றாவது முறையாக மோடி ஆட்சி அமைந்தால் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறும் என்று குமரலிங்கத்தில் நடந்த நிகழ்ச்சியில் பா.ஐ.க தலைவர் அண்ணாமலை பேசினார்

மீண்டும் மோடி ஆட்சி அமைந்தால் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறும் - பா.ஜ.க தலைவர் அண்ணாமலை!

KarthigaBy : Karthiga

  |  23 Sep 2023 2:45 PM GMT

என்மன் என் மக்கள் இந்த முழக்கத்துடன் பா ஜ ஜனதா தலைவர் அண்ணாமலை தமிழக முழுவதும் பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளத்தை அடுத்த கொழுமம் பகுதியில் இருந்து பாதயாத்திரை தொடங்கினார் குமரலிங்கம் பஸ் நிலையத்தில் கூடியிருந்த கூட்டத்தின் நடுவில் பேசியதாவது :-


கர்மவீரர் காமராஜர் தமிழகத்தின் முதலமைச்சராக ஒன்பது ஆண்டுகள் இருந்தார் . அவர் எத்தனை அணைகள் கட்டலாம் என்று யோசித்தார். அவர் தமிழகத்தில் 12 அணைகள் கட்டினார். இன்றைய ஆட்சியாளர்கள் எத்தனை டாஸ்மாக்குகள் திறக்கலாம் எப்படி வருமானத்தை ஈட்டலாம் என்று யோசிக்கிறார்கள். தமிழகத்தில் தி.மு.க ஆறாவது முறையாக ஆட்சியில் இருக்கிறது. அவர்கள் காலத்தில் வெறும் ஐந்து அணைகள் கட்டப்பட்டது. ஏனென்றால் தி.மு.க.வை பொறுத்தவரை அணை கட்டாமல் இருந்தால் தான் மணல் அள்ள முடியும். மண்ணிற்கு அனுமதி கொடுக்காததால் தான் கிராம நிர்வாக அலுவலரை அலுவலகத்துக்குள் புகுந்து வெட்டிக் கொன்றிருக்கிறார்கள்.


9 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் பாரத பிரதமர் மீண்டும் மூன்றாவது முறையாக ஆட்சி அமைப்பார் . உறுதியான உலகமே திரும்பிப் பார்க்கக் கூடிய லஞ்ச லாவண்யம் இல்லாத ஆட்சியை இப்போது நடத்திக் கொண்டிருக்கிறார். 2014 - இல் உலகத்தில் 11வது பொருளாதார நாடாக இருந்த இந்தியா இன்று ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக மாறி உள்ளது. மூன்றாவது முறையாக மோடி ஆட்சி அமைத்தால் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக மாறும் . 2047க்குள் உலகத்தில் முதன்மை நாடாக இந்தியா மாறும். அவர் 2014-ல் 283 எம்.பி.க்களுடன் ஆட்சி அமைத்தார். 2019-ல் 303 எம்.பி.க்களுடன் ஆட்சி அமைத்தார் . வரும் தேர்தலில் 400 எம்பிக்களுடன் ஆட்சி அமைப்பார்.


இவ்வாறு அவர் பேசினார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News