பா.ஜ.க ஆட்சியில் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறும் - நிர்மலா சீதாராமன்!
2027 ஆம் ஆண்டுக்குள் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறும் என நிர்மலா சீதாராமன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
By : Karthiga
இந்து பசிபிக் பிராந்திய பேச்சுவார்த்தை டெல்லியில் நடந்தது. இதில் மத்திய நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-
நடப்பு ஆண்டில் சர்வதேச தாக்கங்கள் இருந்த போதும் இந்திய பொருளாதார சதவீதத்திற்கு சற்றே குறைவாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது பெரிய பொருளாதார நாடுகளை ஒப்பிடுகையில் மிகவும் அதிகமாகும். எனவே இந்திய பொருளாதாரம் சரியான திசையில் செல்கிறது. அத்துடன் பிரகாசமான எதிர்காலத்தையும் நோக்கி நடை போடுகிறது .
சர்வதேச நிதியத்தின் வழக்கமான பன்மை வாத மதிப்பீடுகளின் படி கூட இந்திய பொருளாதாரம் 2027 ஆம் ஆண்டுக்குள் ஜப்பான் மற்றும் ஜெர்மனியை பின்னுக்குதள்ளி உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக உருவாகும் என நம்பப்படுகிறது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி டிரில்லியன் டாலரை கடக்கும். இந்தியா வளர்ந்த பொருளாதரமாக மாற விரும்புகிறது. இந்தியாவின் நீல பொருளாதாரம் ஜிடிபி யில் நான்கு சதவீத பங்களிப்பை வழங்குகிறது. வாய்ப்புகளின் பெருங்கடலாகவும் உள்ளது.
இந்தியாவின் 9 மாநிலங்கள் மற்றும் நான்கு யூனியன் பிரதேசங்கள் கடற்கரையோரம் அமைந்திருக்கிறது. 12 பெரிய துறைமுகங்கள் 200 மேற்பட்ட சிறிய துறைமுகங்கள் அவற்றில் அமைந்திருக்கின்றன. அத்துடன் சர்வதேச மற்றும் உள்நாட்டு வர்த்தகத்துக்காக செல்லக்கூடிய நீர் வழிகளின் பரந்த வலையமைப்பை கொண்டிருக்கிறது. 2020 ஆம் ஆண்டு நிலவரப்படி வளரும் நாடுகளில் கடல் சார்ந்த பொருட்கள் மற்றும் சேவைகளின் ஏற்றுமதியில் இந்தியா இரண்டாவது பெரிய நாடாக இருந்தது.
இந்தோ பசிபிக் பிராந்தியம் சந்தேகத்திற்கு இடமின்றி உலகின் பொருளாதார ரீதியாக மிகவும் ஆற்றல் வாய்ந்த பகுதியாக உள்ளது. இது உலகளாவிய ஜிடிபியில் 60 சதவீதத்தையும் உலகளாவிய வர்த்தகத்தில் சுமார் 50 சதவீதத்தையும் உள்ளடக்கியது. மறுபுறம் இந்தோ பசுபிக் ஒரு புவிசார் அரசியல் ரீதியாக போட்டியிடும் இடமாகவும் உள்ளது. இது பெரும் அதிகார போட்டியால் சூழப்பட்டுள்ளது.
இந்தியா தனது பொருளாதார வளர்ச்சியை விரைவுப் படுத்தி திரளான மக்களை வறுமையில் இருந்து செழுமைக்கு நகர்த்துவதால் அதன் விரிவான தேசிய சக்தி மற்றும் அதன் சர்வதேச அந்தஸ்து ஆகியவற்றின் அடிப்படையில் அது பெரும் ஆதாயங்களை பதிவு செய்கிறது. இன்று இந்தியர்கள் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் தலைநிமிர்ந்து உள்ளனர். இந்தியாவின் சாதனைகளையும் வெற்றிகளையும் உலகமே பாராட்டுகிறது . நாங்கள் உள்நோக்கிய சாய்ந்த சக்தியாக இருக்க முடியாது என்பது தெளிவாகிறது. பழுப்பு பொருளாதார மாதிரியில் இருந்து இருந்து நீல நிலைக்கு மாறுவதில் நாங்கள் கவனம் செலுத்துகிறோம். அதை தொடர்ந்து இந்தோ பசிபிக் பகுதி முழுவதையும் அந்த நீல நிற மாற்றத்தை விரிவுபடுத்த விரும்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
SOURCE :DAILY THANTHI