பொருளாதார நெருக்கடியில் இலங்கை... உதவ தயாராக இருக்கும் இந்தியா... நிதி அமைச்சர் உறுதி!
பொருளாதார நெருக்கடியை கையாள்வதில் இலங்கைக்கு ஆதரவளிக்கும் இந்தியா உறுதி.
By : Bharathi Latha
சர்வதேச நாணய நிதியம் (IMF) மற்றும் உலக வங்கி(WB) கூட்டங்களில் இலங்கையின் கடன் பிரச்சினைகள் குறித்த உயர்மட்ட கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் மத்திய நிதி மற்றும் கார்ப்பரேட் விவகாரங்களுக்கான அமைச்சர் நிர்மலா சீதாராமன் சர்வதேச நாணய நிதியம் (IMF) - உலக வங்கி (WB) வசந்த கால கூட்டத் தொடர்களில் நேற்று வாஷிங்டன் D.C இல் இலங்கையின் கடன் பிரச்சினைகள் குறித்த உயர்மட்ட கூட்டத்தில் இந்தியாவின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்றார்.
ஜப்பான் நிதியமைச்சர் திரு. சுசுகி ஷுனிச்சி, பிரான்ஸ் கருவூல பொது இயக்குனர் இம்மானுவேல் மௌலின் மற்றும் இலங்கையின் நிதி அமைச்சர் ஷெஹான் சேமசிங்க ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர். இலங்கையின் ஜனாதிபதியும் நிதியமைச்சருமான ரணில் விக்கிரமசிங்க காணொளி வாயிலாக இதில் கலந்து கொண்டார். இந்நிகழ்வின் நோக்கமானது இலங்கையுடன் இணைந்து கடன் வழங்குவதில் கடன் மறுசீரமைப்பு செயல்முறை தொடர்பான பலதரப்பு ஒத்துழைப்பை நிரூபிப்பதாகும்.
இந்நிகழ்வில், இலங்கையின் ஒருங்கிணைந்த கடன் மறுசீரமைப்பை வழிநடத்த இந்தியா, ஜப்பான் மற்றும் பிரான்ஸ் ஆகிய மூன்று இணைத் தலைவர்களின் கீழ் இலங்கை மீதான கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை செயல்முறையை தொடங்குவதாக அமைச்சர்கள் அறிவித்தனர். மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தற்போதைய பொருளாதார நெருக்கடியை கையாள்வதில் இலங்கைக்கு ஆதரவளிக்கும் இந்தியாவின் உறுதிப்பாட்டை வெளிப்படுத்தினார்.
Input & Image courtesy: News