Kathir News
Begin typing your search above and press return to search.

சீனாவுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது- ராஜ்நாத் சிங்!

சீனாவுக்கு இந்தியா ஒருபோதும் எல்லைப் பிரச்சனையில் அடிபணியாது என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

சீனாவுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது- ராஜ்நாத் சிங்!
X

KarthigaBy : Karthiga

  |  29 April 2024 3:30 PM GMT

சீனாவுடன் இந்தியாவின் பேச்சு வார்த்தைகள் சமூகமாக நடைபெற்று வருகின்றன. அந்நாட்டுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார் .இந்திய எல்லையில் பெரும்பகுதியை சீனா ஆக்கிரமித்து விட்டதாகவும் இதை பிரதமர் மோடி தடுக்கவில்லை என்றும் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி குற்றம் சாட்டி வரும் நிலையில் ராஜ்நாத் சிங் இவ்வாறு தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலை ஒட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பாஜகவுக்கு ஆதரவாக ஞாயிற்றுக்கிழமை பிரச்சாரம் மேற்கொண்டவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது :-

இந்தியா இப்போது பலவீனமான நாடு அல்ல ராணுவ ரீதியில் சக்தி வாய்ந்த நாடாக உருவெடுத்துள்ளது .அண்டை நாடுகளுடன் நாம் நல்லுறவை பேண விரும்புகிறோம். சீனாவுடனான இந்தியாவின் பேச்சு வார்த்தைகள் சுமூகமாகவும் நல்ல சூழலிலும் நடைபெற்று வருகின்றன. பேச்சுவார்த்தையில் முடிவுகளுக்காக நாம் காத்திருக்க வேண்டியுள்ளது. அதேநேரம் எந்த இடத்திலும் இந்தியா அடிபணியவில்லை. ஒருபோதும் அடிபணியாது என்பதை நாட்டு மக்களுக்கு உறுதிபட தெரிவிக்க விரும்புகிறேன் .கடந்த 2014 ஆம் ஆண்டில் பாதுகாப்புத் துறை ஏற்றுமதியின் மதிப்பு ரூபாய் 21 ஆயிரம் கோடியை கடந்தது .

எதிர்வரும் காலங்களில் ஏற்றுமதி மேலும் அதிகரிக்கும். ஏவுகணையோ கவச வாகனமோ வெடிகுண்டுகளோ அல்லது இதர ஆயுதங்களோ இந்தியாவில் இந்தியர்களால் தயாரிக்கப்பட வேண்டும் என மோடி அரசு உதவி கொண்டுள்ளது. இப்போது உள்நாட்டு பாதுகாப்புத் துறை உற்பத்தி மதிப்பு ஒரு லட்சம் கோடியை தாண்டி உள்ளது என்றார் ராஜ்நாத் சிங். நாட்டை பிளவுபடுத்தும் நோக்கத்தால் ஈர்க்கப்பட்டு காங்கிரசில் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது என்று ராஜ்நாத்சிங் விமர்சித்தார். அகமதாபாத்தில் நடைபெற்ற பாஜக பிரச்சார கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

திறன் மிக்க வளர்ந்த இந்தியாவை உருவாக்குவதற்கான உத்தரவாதமே பாஜகவின் தேர்தல் அறிக்கை .ஆனால் காங்கிரசின் தேர்தல் அறிக்கையோ நாட்டை பிளவுபடுத்துதல் மற்றும் ஒரு சார்பு அரசியலால் ஈர்க்கப்பட்டதாகும். 2027 ஆம் ஆண்டுக்குள் உலகின் மூன்றாவது மிகப்பெரிய பொருளாதார நாடக இந்தியா மாறும். இதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தபோதிலும் தொலைநோக்கு பார்வை அயராத பணி லட்சியம் நிறைந்த பிரதமர் மோடியின் வலுவான நம்பகமான தலைமையே முதன்மையான காரணம். இவ்வாறு இராஜ்நாத்சிங் கூறினார்.


SOURCE :Dinamani

Next Story
கதிர் தொகுப்பு
Trending News