Kathir News
Begin typing your search above and press return to search.

பிரதமர் மோடியை அவமதிப்பவர்களை இந்தியா சகித்துக் கொள்ளாது- அகிலேஷ் யாதவுக்கு பா.ஜ.க கடும் கண்டனம்!

பிரதமர் மோடியை ஹிட்லருடன் ஒப்பிட்ட அகிலேஷ் யாதவுக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

பிரதமர் மோடியை அவமதிப்பவர்களை இந்தியா சகித்துக் கொள்ளாது- அகிலேஷ் யாதவுக்கு பா.ஜ.க கடும் கண்டனம்!
X

KarthigaBy : Karthiga

  |  11 March 2024 4:52 PM GMT

பிரதமர் நரேந்திர மோடியை ஜெர்மனி சர்வாதிகாரி ஹிட்லருடன் ஒப்பிட்டு பேசிய அகிலேஷ் யாதவுக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பிரதமர் மோடியை அவமதிப்பவர்களை இந்தியா சகித்துக் கொள்ளாது என்றும் பாஜக கூறியுள்ளது .முன்னதாக பிரதமர் மோடியின் பெயரை குறிப்பிடாமல் அவரை தாக்கி பேசிய அகிலேஷ் யாதவ் 'கடந்த 2014 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தவர்கள் 2024 ஆம் ஆண்டு வெளியேறு இருக்கிறார்கள்.


முன்பு ஹிட்லரின் ஆட்சி காலம் 10 ஆண்டுகள் இருந்தன. அவரால் பத்தாண்டுகளுக்கு மேல் ஆட்சி செலுத்த முடியவில்லை. எனவே இப்போது இவரும் தனது பத்தாண்டுகள் ஆட்சியுடன் வெளியேற இருக்கிறார்' என்றார் .இதற்கு கண்டும் கண்டனம் தெரிவித்து எக்ஸ் வலைதளத்தில் உத்தர பிரதேச துணை முதல்வரும் பாஜக மூத்த தலைவருமான கேசவ் பிரசாத் மவுரியா வெளியிட்ட பதிவில் 'பிரதமர் மோடி இந்தியாவில் மட்டுமல்ல சர்வதேச அளவிலும் புகழ்பெற்ற தலைவர் என்பதை அகிலேஷ் யாதவ் மனதில் கொள்ள வேண்டும் உத்திர பிரதேசத்தில் பாஜக தொடர்ந்த வெற்றிகளை குவித்து வருகிறது. வரும் மக்களவைத் தேர்தலிலும் இந்த வெற்றி தொடரும் சமாஜ்வாடி கட்சியின் குண்டர்கள் கும்பலுக்கு மீண்டும் தோல்வி கிடைக்கும் பிரதமர் மோடியே அவமதிப்பு அவர்களை இந்தியா ஒருபோதும் சகித்துக் கொள்ளாது என்றார்.


உத்தர பிரதேச பாஜக தலைவர் புபேந்திர சிங் சவுதரி இது தொடர்பாக கூறுகையில், 'உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாடி தோல்வி அடைய இருக்கிறது என்பது அகிலேஷ்க்கு ஏற்கனவே தெரிந்துவிட்டது. எனவே அவர் விரக்தியில் என்ன பேசுகிறோம் என்பதை உணராமல் செயல்படுகிறார். பிரதமர் நரேந்திர மோடிக்கு அதிகரித்து வரும் செல்வாக்கால் அச்சமடைந்து அவதூறாக பேசுகிறார். பிரதமர் மோடி தலைமையில் பாஜக மீண்டும் வெற்றி பெறுவது உறுதி 'என்றார்.


SOURCE :Dinamani

Next Story
கதிர் தொகுப்பு
Trending News