இந்தியாவின் கையில் சிறுவண்டாய் சிக்கிய சீனா : ரூ.5,000 கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டதா.? அடுத்தடுத்து தயாராகும் ஆப்பு!
இந்தியாவின் கையில் சிறுவண்டாய் சிக்கிய சீனா : ரூ.5,000 கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டதா.? அடுத்தடுத்து தயாராகும் ஆப்பு!

சமீபத்தில் மகாராஷ்டிர அரசு, சீன நிறுவனங்களுடன் மேற்கொண்ட ரூ.5,020 கோடி மதிப்பிலான ஒப்பந்தங்களை ரத்து செய்வதா அல்லது வேண்டாமா என்பது தொடா்பாக முடிவெடுப்பதில் மத்திய அரசின் கொள்கை முடிவுக்காக மாநில அரசு காத்திருக்கிறது என்று அமைச்சா் சுபாஷ் தேசாய் தெரிவித்தாா்.
இந்நிலையில், இந்த ஒப்பந்தங்களின் நிலை தொடா்பாக மாநில தொழில்துறை அமைச்சா் சுபாஷ் தேசாய் திங்கள்கிழமை அறிக்கையொன்றை வெளியிட்டாா்.
அதில், "சீன நிறுவனங்களுடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் மீது புதிதாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. அதே நிலை தொடா்கிறது. இந்த விவகாரத்தில் மத்திய அரசின் தெளிவான கொள்கை முடிவுக்காக மாநில அரசு காத்திருக்கிறது' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
லடாக்கில் இந்திய- சீன ராணுவத்தினரிடையே கடந்த 15ஆம் தேதி இரவு ஏற்பட்ட மோதலுக்கு பிறகு, இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த மோதல் சம்பவம் நிகழ்ந்த சில மணி நேரங்களுக்கு முன், 5 சீன நிறுவனங்களுக்கும் மகாராஷ்டிர அரசுக்கும் இடையே ரூ.5, 020 கோடி மதிப்பிலான புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியிருந்தன.
மகாராஷ்டிர அரசு சாா்பில் நடைபெற்ற முதலீட்டாளா்கள் மாநாட்டில் இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.