கர்னல் சந்தோஷ் பாகு கொல்லப்பட்ட பிறகு, சீன வீரர்களின் கழுத்தை முறித்த இந்திய ஜவான்கள் - டெக்கான் கிரானிக்கில்.! #IndiaChinaClash
கர்னல் சந்தோஷ் பாகு கொல்லப்பட்ட பிறகு, சீன வீரர்களின் கழுத்தை முறித்த இந்திய ஜவான்கள் - டெக்கான் கிரானிக்கில்.! #IndiaChinaClash

By : Kathir Webdesk
ஜூன் 15 மற்றும் 16 தேதிகளில் இந்திய மற்றும் சீன படைகளுக்கு இடையே ஒரு வன்முறை மோதல் நடந்தது, இது இரு தரப்பிலும் உயிரிழப்புக்கு வழிவகுத்தது. இந்தியா 20 பேர் உயிரிழந்ததை உறுதி செய்துள்ள நிலையில், சீன அதிகாரிகள் அதிகாரபூர்வ புள்ளிவிவரங்களை வழங்கவில்லை. இருப்பினும், சீனப் படையினரின் இறப்பு 40 க்கு மேல் இருக்கும் என்று நம்பப்படுகிறது.
இதைக்குறித்து டெக்கான் க்ரானிக்கில் வெளியிட்டுள்ள செய்தியில், நவீன ராணுவ வரலாற்றில் இல்லாத வகையாக கடுமையான முறையில் எதிர்த் தாக்குதலை இந்திய ராணுவம் மேற்கொண்டதாக டெக்கான் கிரானிக்கில் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. பீகார் ரெஜிமென்ட்டின் கமாண்டிங் ஆஃபீஸ்ர் கர்னல் சந்தோஷ் பாகு சீனப்படையினரால் கொல்லப்பட்ட பிறகு முதலில் 60 இந்திய வீரர்கள் சீனப் படையினரை தாக்கத் தொடங்கினர்.
Image Courtesy: Deccan Chronicle
அவர்கள் சீன வீரர்களின் கழுத்தை குறித்தும்,கற்களால் முகத்தை சிதைத்தும், சீனர்களிடமிருந்த ஆயுதங்களை அவர்களிடமிருந்து பறித்தும் தாக்கத் தொடங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. CO சந்தோஷ் பாஹூவின் மரண செய்தி பரவிய பிறகு 'கதக்' ரெஜிமெண்ட்டும் இவர்களுடன் இணைந்தனர். நெருக்கமான சண்டையில் பேர் பெற்ற அவர்கள் இணைந்ததும் இந்தளவு எதிர்த் தாக்குதலை எதிர்பார்க்காத சீன ராணுவ வீரர்கள் நிலை குலைந்து போயினர்.
போர் முழக்கங்களைக் கூறிக் கொண்டே தாக்கிய இந்திய வீரர்களிடமிருந்து தப்பித்து பலர் மலைப் பகுதிகளுக்கு ஓட முயற்சித்தனர். அவர்களை துரத்தி நம் வீரர்கள் சென்றனர். நம் வீரர்களும் கொடிய முறையில் கொல்லப்பட்டனர் என்றாலும் பதிலடி மிகவும் வீரியமாக இருந்தது என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
