"என் மகன் நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்தான். என் இரண்டு பேரன்களையும் கூட இராணுவத்துக்கு அனுப்புவேன்" சிப்பாய் குந்தன் குமாரின் தந்தை சபதம்.! #IndiaChinaStandoff
"என் மகன் நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்தான். என் இரண்டு பேரன்களையும் கூட இராணுவத்துக்கு அனுப்புவேன்" சிப்பாய் குந்தன் குமாரின் தந்தை சபதம்.! #IndiaChinaStandoff
லடாக்கின் கால்வான் பள்ளத்தாக்கில் சீனாவுடனான மோதல் பதற்றத்தை தணிக்க முயன்ற போது இரு தரப்பினரும் "வன்முறை மோதலில்" உயிரிழந்ததாக இந்திய ராணுவம் ஒரு அறிக்கையை வெளியிட்டது. மேலும் சீனா ஒருதலைப்பட்சமாக எல்லைக்கோட்டில் நிலைமையை(status quo) மாற்ற முயற்சித்ததால் கிழக்கு லடாக்கில் வன்முறை மோதல் நடந்ததாகவும் வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.இந்தியத் தரப்பில் 20 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது, 43 சீன வீரர்கள் உயிரிழந்ததாக கருதப்படுகிறார்கள்.
சீனப் படையினருடன் லடாக் மோதலில் வீர மரணமடைந்த வீரர்களுக்கு இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி, நமது வீரர்களின் தியாகம் வீணாகாது என்று கூறினார். இந்தியா அமைதியை விரும்புகிறது, ஆனால் தூண்டப்பட்டால், இந்தியா சரியான பதிலடி கொடுக்கும் என்றார்.
வீர மரணமடைந்த 20 பேர்களில் பீகாரை சேர்ந்த சிப்பாய் குந்தன் குமாரும் ஒருவர். அவரது தந்தை 'தன் மகன் நாட்டுக்காக உயிரிழந்ததாகவும், தனக்கு இரண்டு பேரன்கள் உள்ளதாகவும் அவர்களையும் ராணுவத்துக்கு அனுப்புவேன்' என்று கூறினார்.
#WATCH Bihar: Father of Sepoy Kundan Kumar, who lost his life in #GalwanValley of Ladakh on June 15-16, says, "My son sacrificed his life for the nation. I have two grandsons, I will send them too." pic.twitter.com/WHkkJw0HEX
— ANI (@ANI) June 17, 2020
இந்த வீரத்தந்தையின் பேச்சு பலருக்கும் கண்ணீரை வர வைத்தது. இப்படிப்பட்ட வீரப்புதல்வர்களை பெற்ற தந்தைகள் இருப்பதால் தான், இந்தியா தலைநிமிர்ந்து நிற்கிறது. குந்தன் குமாருக்கு பிறந்து 17 நாட்கள் ஆன பெண் குழந்தை இருக்கிறது. அவர் தன் பச்சிளங்குழந்தையை இன்னும் ஒரு முறை கூட பார்க்கவில்லை என்பது வேதனையான விஷயம்.
Cover Image: amar ujala.