இந்திய விமானப்படையின் புதிய கொடி அறிமுகம்!
இந்திய விமான படையின் புதிய கொடியை விமானப் படை தளபதி அறிமுகப்படுத்தினார்.
By : Karthiga
இந்திய விமானப்படை கடந்த 1932- ஆம் ஆண்டு அக்டோபர் எட்டாம் தேதி தொடங்கப்பட்டது. இரண்டாம் உலகப்போரில் அதன் பங்களிப்பை பாராட்டி 1945 ஆம் ஆண்டு அதன் பெயர் ராயல் இந்திய விமானப்படை என்று மாற்றப்பட்டது. அதற்கான ஒரு கொடி உருவாக்கப்பட்டது . இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு 1950-ஆம் ஆண்டு முதல் இந்திய விமானப்படை என்ற பெயரில் அழைக்கப்பட்டு வருகிறது. அதன் கொடியும் மாற்றப்பட்டது. கடந்த ஆண்டில் இந்திய கடற்படையின் கொடி மாற்றப்பட்டது. அதேபோல் இந்திய விமான படைக்கும் புதிய கொடி அறிமுகம் செய்யப்பட்டது
உத்திரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் 91- வது இந்திய விமானப்படை தின கொண்டாட்டங்கள் நடந்தன. அதை ஒட்டி விமானங்களில் சாகச நிகழ்ச்சி நடந்தது. விமானப்படை அணிவகுப்பும் நடந்தது. அதில் விமான பணிக்கான புதிய கொடியை விமானப்படை தளபதி வி.ஆர் சவுத்ரி அறிமுகப்படுத்தினார். வலது புறம் மேல் பக்கத்தில் நான்கு சிங்கங்கள் கொண்ட தேசிய சின்னத்துடன் விமானப்படை சின்னம் அமைந்துள்ளது.
அதில் 'சத்தியமேவ ஜெயதே' என்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளன. அதன் கீழே இமயமலை கழுகு சிறகு விரித்து பறப்பது போன்ற படம் நீல நிறத்துக்குள் உள்ளே அமைந்துள்ளது. அதில் 'பாரதீய வாயு சேனா' என்ற வார்த்தைகள் பொறிக்கப்பட்டன." நாம் விரும்பிய உயரத்துக்கு விமான படையை கொண்டு செல்ல அனைவரும் இணைந்து பாடுபடுவோம்" என்று விமானப்படை தளபதி சவுத்ரி பேசினார்.
SOURCE :DAILY THANTHI