இனி ஓட ஓட விரட்டியடிப்போம் - இந்திய எல்லையில் குவியும் கவசவாகனங்கள் : சீனாவின் கொட்டத்துக்கு இராணுவத்தின் பதிலடி!
இனி ஓட ஓட விரட்டியடிப்போம் - இந்திய எல்லையில் குவியும் கவசவாகனங்கள் : சீனாவின் கொட்டத்துக்கு இராணுவத்தின் பதிலடி!
லடாக்கில் உள்ள கால்வான் பள்ளத்தாக்கில் போர் வாகனங்களை இந்திய ராணுவம் நிறுத்தியுள்ளது. சீன துருப்புக்கள் தங்களது வசம் உள்ள கவச வாகனங்களை நிறுத்தி, தங்கள் நிலையை வலுப்படுத்திக் கொண்டுள்ள நிலையில், இந்திய இராணுவம் இந்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இந்தியா வசம் உள்ள பி.எம்.பி 2ரக கவச வாகனங்கள் ஏவுகணைகள், மோட்டார், ராக்கெட்டுகள் மற்றும் இயந்திரத் துப்பாக்கிகள் மூலம் எதிரி மீது தாக்குதல்களை நடத்தும் திறன் கொண்டவை மட்டுமல்லது, உள்ளே அமர்ந்திருக்கும் வீரர்களும் களத்தில் தீவிபத்துகளுக்கு இடையே பாதுகாப்பாக முன்னேற முடியும்.
எல்லைக்கட்டுப்பாட்டு பகுதி என்று சொல்லப்படும் எல்.ஐ.சியின் மறுபுறத்தில் வெற்று பகுதி இருப்பதால் சீன இராணுவம் கவச வாகனங்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளது. சீன இராணுவம் டாங்கிகள் மற்றும் பிற வாகனங்களை அதிவேகத்தில் கொண்டு வருவது எளிது.
சில ஆண்டுகளுக்கு முன்பு, இந்திய ராணுவம் லடாக்கில் டாங்கிகள் மற்றும் கவச வாகனங்களை நிறுத்தத் தொடங்கியது. சீனா ஏற்கனவே தனது ஆக்கிரமிக்கப்பட்ட திபெத் பகுதியில் சாலைகள் மற்றும் ரயில்வே நெட்வொர்க்கை உருவாக்கியது. ஆனால் இந்திய தரப்பில் நிலப்பரப்பு சிக்கல் காரணமாக உள்கட்டமைப்பு மேம்பாடு மெதுவான வேகத்தில் தொடர்ந்தது.
சீனாவிலிருந்து தாக்குதல் நடத்தப்படக்கூடிய சூழ்நிலையை மதிப்பிட்டு, இந்திய ராணுவம் லடாக் சமவெளிக்கு டாங்கிகள் மற்றும் கவச வாகனங்களை கொண்டு வரத் தொடங்கியது. தற்போது, லடாக் பிராந்தியத்தில் ஏராளமான டாங்கிகள் மற்றும் கவச வாகனங்கள் சீனப் படையினருக்கு உரிய பதிலடி அளிக்க இந்திய ராணுவத்தால் நிறுத்தப்பட்டுள்ளன.
இந்த நடவடிக்கையை தொடர்ந்து சமீபத்தில் சீன படைகள் லடாக்கில் பின்வாங்கியது குறிப்பிடத்தக்கது.