Kathir News
Begin typing your search above and press return to search.

இந்தியன் வங்கியின் மொத்த வருவாய் 18% அதிகரிப்பு - வங்கிகள் தொடர்பான எதிர்மறை பிரச்சாரங்களையும் தாண்டி படைக்கப்பட்ட சாதனை.!

இந்தியன் வங்கியின் மொத்த வருவாய் 18% அதிகரிப்பு - வங்கிகள் தொடர்பான எதிர்மறை பிரச்சாரங்களையும் தாண்டி படைக்கப்பட்ட சாதனை.!

இந்தியன் வங்கியின் மொத்த வருவாய் 18% அதிகரிப்பு - வங்கிகள் தொடர்பான எதிர்மறை பிரச்சாரங்களையும் தாண்டி படைக்கப்பட்ட சாதனை.!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  24 Oct 2019 12:33 PM GMT


2019-2020 நிதியாண்டின் 2-வது காலாண்டில் மொத்த வருவாய் 18% அதிகரித்திருப்பதாக இந்தியன் வங்கி அறிவித்துள்ளது. மொத்த லாபம் 139% அதிகரித்து ரூ.359 கோடியாக உள்ளது. இதர வருவாய் வளர்ச்சி 72% ஆக உள்ளது.


2019-2020 நிதியாண்டின் 2-வது காலாண்டுக்கான நிகரலாபம் 26% அதிகரித்து ரூ.1502 கோடியைத் தொட்டுள்ளது. சென்ற நிதியாண்டின் இதேகாலத்தில் இது ரூ.1191 கோடியாக இருந்தது. 2018 செப்டம்பர் 30-உடன் முடிவடைந்த காலாண்டில் ரூ.5129 கோடியாக இருந்த வங்கியின் மொத்த வருவாய் 18% அதிகரித்து, 2019 செப்டம்பர் 30-உடன் முடிவடைந்த காலாண்டில் ரூ.6045 கோடியாக உள்ளது.


மொத்த வட்டி வருவாய் 8% அதிகரித்து, ரூ.1863 கோடியாக உள்ளது.மொத்த வட்டி வருவாயையும், இதர வருவாயையும் சேர்த்து ஒட்டுமொத்த வருவாய் 20% அதிகரித்து ரூ. 2601 கோடியாக உள்ளது.


உள்நாட்டு நிலையில், வட்டிமூலம் கிடைத்த லாபம் 9 அடிப்படை புள்ளிகள் குறைந்து 2.92% என்ற நிலையில் உள்ளது. வட்டி அல்லாத வருவாய் 2019 செப்டம்பர் 30-உடன் முடிவடைந்த 2-வது காலாண்டில் ரூ.738 கோடியாக உள்ளது.


2019 செப்டம்பர் 30-உடன் முடிவடைந்த 2-வது காலாண்டில் செயல்பாட்டுக்கான செலவினம் ரூ.1099 கோடியாக இருந்தது. இது சென்ற நிதியாண்டின் இதேகாலத்தில் ரூ.968 கோடியாக இருந்தது.


மொத்த வரவு-செலவு அளவு 14% அதிகரித்து, 2019 செப்டம்பர் 30-உடன் முடிவடைந்த நிதியாண்டின் காலத்தில் ரூ.2,97,662 கோடியாக இருந்தது. இது முந்தைய நிதியாண்டின் இதேகாலத்தில் ரூ.2,61,642 கோடியாக இருந்தது. உலக வர்த்தகத்தின் அளவு ரூ.4,47,420 கோடியாகும். இது முந்தைய ஆண்டின் இதேகாலத்தைவிட 14% வளர்ச்சியாகும்.


மொத்த வைப்புத் தொகையின் அளவு ரூ. 2,53,172 கோடியாக உள்ளது. இது 15% வளர்ச்சியாகும். வங்கியிலிருந்து வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்ட கடன் தொகையின் அளவு ரூ. 1,94,248 கோடியாகும். இதில் வீட்டுவசதிக் கடன் 32%, வாகனக்கடன் 12%, வேளாண் கடன் 16%, குறு-சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான கடன் 20%, பெருநிறுவனங்களுக்கான கூடுதல் கடன் 6%, வெளிநாடுகளுக்கான கடன் 17% ஆகும்.


முன்னுரிமை துறைகளுக்கான ஒதுக்கீட்டு அளவு ரூ. 73,217 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நலிந்த பிரிவினருக்கான கடன் தொகையும் ரூ.18,537 கோடி அளவுக்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.


பேசல்-III வழிகாட்டுதல்படி வங்கியின் மூலதன விகிதம் 12.96% என்ற அளவில் ஆரோக்கியமான நிலையில் உள்ளது. நிகர வாராக்கடன் அளவு 4 அடிப்படை புள்ளிகள் அதிகரித்து நிகர கடன்களில் 7.20% ஆக இருந்தது. மொத்த வாராக்கடன் அளவு 69 அடிப்படைப் புள்ளிகள் குறைந்து, 3.54% ஆக இருந்தது.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News