மனிதாபிமான முறையில் ஆப்கனுக்கு உதவ இந்தியா முன்வந்துள்ளது: தாலிபன் துணை பிரதமர் தகவல்!
மனிதாபிமான முறையில் ஆப்கானிஸ்தானுக்கு அனைத்து வகையிலான உதவிகளையும் வழங்க இந்தியா முன்வந்துள்ளதாக தாலிபான் துணை அதிபர் கூறியுள்ளார்.
By : Thangavelu
மனிதாபிமான முறையில் ஆப்கானிஸ்தானுக்கு அனைத்து வகையிலான உதவிகளையும் வழங்க இந்தியா முன்வந்துள்ளதாக தாலிபான் துணை அதிபர் கூறியுள்ளார்.
கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி ஆப்கானிஸ்தானில் தாலிபான் பயங்கரவாதிகள் ஆட்சியை கைப்பற்றினர். இதனால் அந்நாட்டில் மக்களாட்சி அகற்றப்பட்டு பயங்கரவாதிகளின் ஆட்சி வந்தது. அப்போதிலிருந்து உணவு பஞ்சம் மற்றும் பொருளாதார ரீதியில் பல்வேறு சிக்கல்களை அந்நாடு சந்தித்து வருகிறது. இதனால் உலக நாடுகள் உதவ முன்வர வேண்டும் என்று தாலிபான்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.
இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சிக்கு வந்த பின்னர் முதன்முறையாக இந்திய குழுவிடம் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இந்த சந்திப்பானது ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்றுள்ளது. இதில் இந்திய வெளியுறவுத்துறை இணைச் செயலாளர் ஜெ.பி.சிங்கும் தாலிபான்கள் தரப்பில் ஆப்கானிஸ்தான் இடைக்கால துணை பிரதமர் அப்துல் சலாம் ஹனாஃபியும் பேசியுள்ளனர். இதன் பின்னர் ஹனாஃபி பேசும்போது, போரினால் பாதிக்கப்பட்ட ஆப்கனுக்கு தேவையான உதவிகள் செய்வதற்கு இந்தியா தெரிவித்துள்ளது என்றார். இருந்தபோதிலும் இந்திய தரப்பில் இன்னும் விளக்கம் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Source, Image Courtesy: Puthiyathalamurai