Kathir News
Begin typing your search above and press return to search.

புர்ஜ் கலீபாவில் ஒளிர விடப்பட்டு அலங்கரித்த இந்திய தேசியக் கொடி - துபாய் மாநாட்டில் அரங்கம் அதிர்ந்த பிரதமர் மோடியின் பேச்சு!

அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் ஊழலற்ற அரசு தான் உலகுக்கு இன்று தேவை என துபாய் மாநாட்டில் பிரதமர் மோடி கூறினார்.

புர்ஜ் கலீபாவில் ஒளிர விடப்பட்டு அலங்கரித்த இந்திய தேசியக் கொடி - துபாய் மாநாட்டில் அரங்கம் அதிர்ந்த பிரதமர் மோடியின் பேச்சு!
X

KarthigaBy : Karthiga

  |  15 Feb 2024 12:11 PM GMT

பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக ஐக்கிய அரபு அமீரகம் சென்றிருந்தார். அபுதாபியில் அவரை அமீரகத்தின் அதிபர் முகமது பினௌ சையத் லௌ நஹ்யான் நேரில் வரவேற்றார். பின்னர் இரு தலைவர்களும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதுடன் பல்வேறு ஒப்பந்தங்களும் கையெழுத்தாகின. தனது பயணத்தின் இரண்டாவது நாளான நேற்று துபாயில் நடந்த உலக அரசு உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-


இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக அரசியல் மீதான மக்களின் நம்பிக்கை அதிகரித்து இருக்கிறது. இந்திய அரசின் நோக்கம் மற்றும் அர்ப்பணிப்பு மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். மக்களின் உணர்வுகளுக்கு முன்னுரிமை அளித்ததால் தான் இது சாத்தியமானது. குஜராத் முதல் மந்திரியாகவும் இந்தியாவின் பிரதமராகவும் 23 ஆண்டுகளை அரசியலில் செலவிட்டு உள்ளேன். குறைந்தபட்ச அரசு அதிகபட்ச நிர்வாகம் என்பதே எனது கொள்கையாகும். பெண்கள் தலைமையிலான வளர்ச்சி மற்றும் நிதி சமூகம் மற்றும் அரசியல் நிலைகளில் இந்திய பெண்களின் நிலையை வலுப்படுத்துவதில் எனது அரசு கவனம் செலுத்துகிறது.


சமூகம் மற்றும் நிதி உள்ளடக்கம் போன்றவை அரசின் முன்னுரிமையாக உள்ளது. நாட்டில் 50 கோடிக்கு அதிகமான மக்கள் வங்கி அமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளனர் .ஒருபுறம் உலகம் நவீனத்துவத்தை நோக்கி வளர்ந்து வருகிறது .மறுபுறம் முந்தைய நூற்றாண்டுகளின் சவால்கள் அதிகரித்து வருகிறது. இன்று தொழில்நுட்பம் நேர்மறையாக இருந்தாலும் சரி எதிர்மறையாக இருந்தாலும் சரி ஒரு முக்கிய இடையூறாக உள்ளது . பல்வேறு வடிவங்களில் பயங்கரவாதம் மனிதகுலத்தில் ஒவ்வொரு நாளும் புதிய சவால்களை கொண்டு வருகிறது.


பருவநிலை சவால்கள் காலப்போக்கில் பரவலாகி வருகின்றன .ஒருபுறம் உள்நாட்டு பிரச்சினைகள் ,மறுபுறம் சர்வதேச அமைப்பு சீர்குலைந்ததாக தெரிகிறது. அனைவரையும் உள்ளடக்கிய அனைவரையும் அழைத்துச் செல்லும் தூய்மையான மற்றும் ஊழலற்ற அரசுதான் இந்த உலகிற்கு தேவை. இவ்வாறு பிரதமர் மோடி கூறினார். பிரதமர் மோடி வருகையை ஒட்டி துபாயில் உள்ள உலகின் மிகவும் உயரமான கட்டிடமான புர்ஜ் கலீபாவில் இந்தியாவின் தேசிய கொடி இரவு ஒளிர விடப்பட்டது. இதை அங்குள்ள இந்தியர்கள் மற்றும் ஏராளமானோர் பார்த்து பரவசமடைந்தனர்.


SOURCE :DAILY THANTHI


SOURCE ;DAILY THANTHI

Next Story
கதிர் தொகுப்பு
Trending News