Kathir News
Begin typing your search above and press return to search.

கடற்கொள்ளையர்களிடம் இருந்து சரக்குக் கப்பலை மீட்ட இந்திய கடற்படை கமாண்டோக்கள்!

கடந்த மூன்று மாதங்களாக சோமாலிய கடற்கொள்ளையர்கள் பிடியில் இருந்த ருயென் சரக்கு கப்பலை இந்திய கடற்படை மீட்டது.

கடற்கொள்ளையர்களிடம் இருந்து சரக்குக் கப்பலை மீட்ட இந்திய கடற்படை கமாண்டோக்கள்!
X

KarthigaBy : Karthiga

  |  18 March 2024 5:17 PM GMT

இந்திய கடற்படை போர்க்கப்பல் ஐ என் எஸ் கொல்கத்தா ரோந்து கப்பல் அய்யனார் சுபத்ரா ஆளில்லா விமானங்கள் ட்ரோன், சி - 17 போர் விமானங்கள் ஆகியவை இந்த பணியில் ஈடுபட்டன சுமார் 40 மணி நேரம் நடைபெற்ற நடவடிக்கையின் இறுதியில் கப்பல் பணியாளர்கள் 17 பேரையும் கடற்படை கமாண்டோக்கள் பாதுகாப்பாக மீட்டனர் .

காசா போரில் ஹமாஸுக்கு ஆதரவாக ஏமனின் ஹுதி கிளர்ச்சியாளர்கள் செங்கடல் பகுதியில் பயணிக்கும் சரக்கு கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனிடையேசோமாலிய கடற்கொள்ளையர்கள் கப்பல்களில் கொள்ளை அடிக்கும் செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர் . ஒரு மில்லியன் டாலர் மதிப்பிலான 37,800 டன் சரக்குகளுடன் பயணித்த மால்டா நாட்டின் ருயென் சரக்கு கப்பலை சோமாலிய கடற் பகுதியில் கடந்த ஆண்டு டிசம்பரில் கடத்தப்பட்டது.

பிற கப்பல்களை கொள்ளை அடிக்க இந்தக் கப்பலை கடற்கொள்ளையர்கள் பயன்படுத்தி வந்தனர். கடற்கொள்ளை சம்பவங்கள் மற்றும் ஹூதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதலிலிருந்து சரக்கு கப்பல்களை பாதுகாக்கும் பணியில் 10-க்கும் மேற்பட்ட போர் கப்பல்களை இந்திய கடற்படை அரபிக் கடலில் ஈடுபடுத்தி உள்ளது. கடற்கொள்ளையர்களின் கட்டுப்பாட்டில் உள்ள ருயென் சரக்கு கப்பலை ஐ.என் எஸ் கொல்கத்தா போர்க்கப்பல் வெள்ளிக்கிழமை இடைமறித்தது. அதிலிருந்து அனுப்பப்பட்ட ட்ரோன் மூலம் சரக்கு கப்பலில் கடற்கொள்ளையர்கள் இருப்பதை கடற்படை உறுதி செய்தது.

அப்போது ட்ரோன் மீதும் போர்க்கப்பல் மீதும் கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தினர் .தற்காப்புக்காகவும் கப்பலில் உள்ள பணியாளர்களுக்கு எவ்வித அச்சுறுத்தலும் ஏற்படக் கூடாது என்பதற்காகவும் சர்வதேச சட்டங்களை பின்பற்றி தேச சட்டங்களை பின்பற்றி கடற்கொள்ளையர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. மேலும் கடத்தப்பட்ட அந்தக் கப்பலையும் அதில் உள்ள பணியாளர்களையும் விடுவிக்குமாறு எச்சரிக்கப்பட்டது .தொடர்ந்து ட்ரோன் பி8ஐ கடற்படை உளவு விமான மூலம் சரக்கு கப்பலை இந்திய கடற்படை தொடர்ந்து கண்காணித்து வந்தது.

இந்நிலையில் இந்திய கடற்படை ரோந்துக் கப்பலான ஐ.என் .எஸ் சுபத்ரா சி -17 போர் விமானம் ஆகியவை இந்த பணியில் சனிக்கிழமை பங்கேற்றன போர் விமானத்தில் இருந்து பாராசூட் மூலம் ரப்பர் படகுகளுடன் கடற்படை கமாண்டோக்கள் கடலில் இறக்கப்பட்டனர். ரப்பர் படகுகள் சரக்கு கப்பலை சென்றடைந்தன. தொடர் அழுத்தம் மற்றும் கடற்படையின் செயல்பாடுகளுக்கு அஞ்சிய கடற்கொள்ளையர்கள் 35 கடற்படை கமாண்டோக்களிடம் சரண் அடைந்தனர். இதை அடுத்து கப்பல் பணியாளர்கள் 17 பேரும் எந்தவித காயங்களும் இன்றி பாதுகாப்பாக மீட்கப்பட்டனர் .தொடர்ந்து கப்பலில் ஏதேனும் சட்டவிரோத ஆயுதங்கள் கடத்தல் பொருள்கள் உள்ளனவா என்பது குறித்து கடற்படையினர் சோதனையிட்டனர்.


SOURCE :Dinamani

Next Story
கதிர் தொகுப்பு
Trending News