Kathir News
Begin typing your search above and press return to search.

அயர்லாந்து பிரதமராக இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் மீண்டும் தேர்வு

அயர்லாந்து பிரதமராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்

அயர்லாந்து பிரதமராக இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் மீண்டும் தேர்வு
X

KarthigaBy : Karthiga

  |  19 Dec 2022 1:45 PM GMT

அயர்லாந்து நாட்டின் பிரதமராக கடந்த 2017 முதல் 2020 வரை பதவி வகித்தவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த லியோ வரத்கர். 38 வயதில் பிரதமர் ஆனது மூலம் அயர்லாந்தின் இளம் பிரதமர் என்கிற பெருமையை பெற்றார். கடந்த 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் லியோ வரத்கர் தலைமையிலான பைன்கேல் கட்சி பியனா பெயில் மற்றும் பசுமை கட்சியுடன் இணைந்து கூட்டணி ஆட்சியை அமைத்தது. அதில் லியோ வரக்கர் துணை பிரதமராகவும் தொழில் வர்த்தகம் மற்றும் வேலைவாய்ப்பு மந்திரி ஆகவும் பணியாற்றினார்.


முன்னதாக கூட்டணி அரசாங்கத்தை அமைப்பது தொடர்பாக செய்து கொண்ட ஒப்பந்தத்தில் 2022 டிசம்பர் வரை பியானா பெயில் கட்சியின் தலைவர் மைக்கேல் மார்டின் பிரதமராகவும், அதன் பிறகு அரசின் எஞ்சிய பதவிக்காலம் முழுவதும் லியோ வரத்கர் பிரதமராகவும் இருப்பார் என்று முடிவு செய்யப்பட்டது. அதன்படி லியோ வரத் கரை புதிய பிரதமராக தேர்வு செய்வதற்கான ஓட்டெடுப்பு நாடாளுமன்றத்தில் நடந்தது. இதில் 87 உறுப்பினர்கள் லியோவரத்கர் பிரதமர் ஆவதற்கு ஆதரவாக வாக்களித்தனர். 62 பேர் எதிராக வாக்களித்தனர். இதன் மூலம் லியோவரத்கர் மீண்டும் அயர்லாந்தின் பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.




Next Story
கதிர் தொகுப்பு
Trending News