Kathir News
Begin typing your search above and press return to search.

பிரதமரின் ராணுவ மருத்துவமனை விஜயம் குறித்து அவதூறு பரப்புபவர்களுக்கு இராணுவம் பதிலடி,திருந்துவார்களா? #IndianArmy #Modi

பிரதமரின் ராணுவ மருத்துவமனை விஜயம் குறித்து அவதூறு பரப்புபவர்களுக்கு இராணுவம் பதிலடி,திருந்துவார்களா? #IndianArmy #Modi

பிரதமரின் ராணுவ மருத்துவமனை விஜயம் குறித்து அவதூறு பரப்புபவர்களுக்கு இராணுவம் பதிலடி,திருந்துவார்களா? #IndianArmy #Modi

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  5 July 2020 6:29 AM GMT

காங்கிரஸ் கட்சியும் அதன் கூட்டாளிகளும், தமிழ்நாட்டில் அதன் அல்லக்கைகளும் நேற்று பிரதமர் மோடி ராணுவ மருத்துவமனைக்கு சென்று காயமுற்ற வீரர்களை சந்தித்தது நாடகம் என ஒரு இழிவான பிரச்சாரத்தைத் தொடங்கின.லே (Leh) இராணுவ மருத்துவமனையில் காயமடைந்த வீரர்களுடன் பிரதமர் சந்திப்பு நடத்தப்பட்டது.

பிரதமரின் வருகையின் போது எடுக்கப்பட்ட படங்களை வெளியிட்டு, காங்கிரஸ் தலைவர் அபிஷேக் தத் நேற்று இது ஒரு மருத்துவமனை போல் இல்லை, ஏனெனில் ட்ரிப்ஸ் இல்லை, படுக்கைகளுக்கு அருகில் மருந்துகள் இல்லை, மருத்துவர்களுக்கு பதிலாக புகைப்படக்காரர்கள் உள்ளனர் என அளந்து தள்ளினார் தமிழ்நாட்டில் வெளிப்படையான திமுக ஆதரவாளர்களும், பத்திரிகையாளர், ஆர்வலர் எனும் பெயரில் வலம் வரும் மறைமுக ஆதரவாளர்களும் இதே கூச்சலை முன்னெடுத்தனர்.

இதைத் தொடர்ந்து, ​​இந்திய இராணுவம் இவ்வாறு பரப்பப்படும் போலி செய்திகளை பற்றியும் அது எந்தளவு 'தீங்கிழைக்கும் நோக்கிலும் மற்றும் ஆதாரமற்றதாக' உள்ளது என்று தெளிவுபடுத்தியது.

இந்திய இராணுவத்தின் செய்திக்குறிப்பு பின்வருமாறு:

ஜூலை 03, 2020 அன்று பிரதம மந்திரி திரு நரேந்திர மோடி லேவில் உள்ள பொது மருத்துவமனைக்கு விஜயம் செய்தபோது பார்வையிட்ட வசதியின் நிலை குறித்து சில இடங்களில் மோசமான மற்றும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இது துரதிர்ஷ்டவசமானது. ஆயுதப்படைகள் தங்கள் வீரர்களுக்கு சிறந்த சிகிச்சையை அளிக்கின்றன. பிரதமர் பார்வையிட்ட இடம், 100 படுக்கைகளின் விரிவாக்க திறனின் ஒரு பகுதியாகும், மேலும் இது பொது மருத்துவமனை வளாகத்தின் ஒரு பகுதியாகும் என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. COVID-19 நெறிமுறைப் படி பொது மருத்துவமனையின் சில வார்டுகளை தனிமைப்படுத்தும் வசதிகளாக மாற்ற வேண்டும். எனவே, பொதுவாக பயிற்சி ஆடியோ,வீடியோ ஹால் ஆகப் பயன்படுத்தப்பட்ட இந்த மண்டபம் ஒரு வார்டாக மாற்றப்பட்டது, ஏனெனில் இந்த மருத்துவமனை கோவிட் சிகிச்சை மருத்துவமனையாகவும் பயன்படுத்தப்பட்டது. COVID பகுதிகளிலிருந்து தனிமைப்படுத்தப்படுவதை உறுதி செய்வதற்காக கால்வானில் இருந்து வந்ததிலிருந்து காயமடைந்த வீரர்கள் அங்கு தங்க வைக்கப்பட்டுள்ளனர். இராணுவத் தளபதி ஜெனரல் M.M நாரவனே மற்றும் ராணுவத் தளபதியும் கூட அதே இடத்தில் தான் காயமடைந்த வீரர்களைப் பார்வையிட்டனர்.

பிரதமர் மோடி பார்வையிட்ட பகுதி , பொது மருத்துவமனை வளாகத்தின் ஒரு பகுதியாகும் என்று இந்திய ராணுவம் வெளியிட்டுள்ள தெளிவுபடுத்தலில் தெளிவாகக் கூறுகிறது.

நமது வீரர்களின் மன உறுதியை உயர்த்துவதற்காக பிரதமர் மோடி லேவில் உள்ள நிமு பகுதிக்கு விஜயம் செய்த ஒரு நேரத்தில், காங்கிரசும் அதன் அல்லக்கைகளும் இழிவான அரசியலில் ஈடுபட்டு வருகின்றனர். பிரதமர் மீதான வெறுப்புக்கும் இந்தியா மீதான அவர்கள் வெறுப்புக்கும் விதியாசமில்லாமல் போய், இராணுவமே விளக்கம் கொடுக்க வேண்டியுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News