Kathir News
Begin typing your search above and press return to search.

மோடி ஆட்சியின் கீழ் 29 சதவீதம் அதிகரித்துள்ள நாட்டின் நிலக்கரி உற்பத்தி!

நாட்டின் நிலக்கரி உற்பத்தி 29 சதவீதம் அதிகரித்துள்ளதாக மத்திய நிலக்கரி அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.

மோடி ஆட்சியின் கீழ் 29 சதவீதம் அதிகரித்துள்ள நாட்டின் நிலக்கரி உற்பத்தி!
X

KarthigaBy : Karthiga

  |  4 March 2024 6:31 AM GMT

நடப்பு நிதி ஆண்டில் பிப்ரவரி வரையிலான காலத்தில் நாட்டின் நிலக்கரி உற்பத்தி 29 சதவீதம் அதிகரித்துள்ளது என செய்திகள் வெளியாகி உள்ளது. இது குறித்து மத்தியில் நிலக்கரி அமைச்சகம் வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-


நிறுவனங்களுக்கு சொந்தமான தனி பயன்பாட்டு நிலக்கரி சுரங்கங்கள் மற்றும் வணிக ரீதியிலான நிலக்கரி சுரங்கங்கள் என இரண்டிலுமே நிலக்கரி உற்பத்தி அதிகரித்துள்ளது. 2023 ஏப்ரல் 1 முதல் பிப்ரவரி 29 , 2024 வரையிலான காலகட்டத்தில் இந்த இருவகை சுரங்கங்களில் இருந்து மொத்த நிலக்கரி உற்பத்தி மற்றும் பயன்பாட்டுக்கு அனுப்பியது முறையே 126.80 மில்லியன் டன் மற்றும் 128.88 மில்லியன் டன் ஆகும். இது 20223 நிதி ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடும்போது முறையே 27.06 சதம் மற்றும் 29.14 சதம் அதிகமாகும் .


நிலக்கரி உற்பத்தி மற்றும் நிலக்கரி அமைப்புகளில் இந்த குறிப்பிடத்தக்க வளர்ச்சி இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்வதிலும் இறக்குமதியை குறைப்பதிலும் நிலக்கரி அமைச்சகம் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் செயல்படுவதற்கு ஒரு சான்றாகும். இந்த முயற்சிகள் தற்சார்பை ஊக்குவிக்கும் வகையில் அமைந்துள்ளன. நிலக்கரி அமைச்சகம் இந்த வெற்றிக்கு கொள்கை சீர்திருத்தங்களின் மூலோபாய அமலாக்க மற்றும் சுரங்க ஒதுக்கீடு தாரர்களின் இடைவிடாத அர்ப்பணிப்பு ஆகியவற்றை காரணம் காட்டுகிறது. நிலக்கரி அமைச்சகம் இந்த வளர்ச்சி பாதையை நிலை நிறுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறது. நாட்டின் அதிகரித்து வரும் எரிசக்தி தேவைகளை எதிர் கொள்ளும் வகையில் செயல்பாடுகளை மேலும் அழகு படுத்துவதும் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதும் இதன் நோக்கமாகும்.


SOURCE :Kaalaimani.com



Next Story
கதிர் தொகுப்பு
Trending News