Kathir News
Begin typing your search above and press return to search.

நடப்பு நிதி ஆண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 6.3 சதவீதமாக இருக்கும் - உலக வங்கி கணிப்பு!

நடப்பு நிதியாண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 6.3 சதவீதமாக இருக்கும் என்று உலக வங்கி கணிப்பு தெரிவித்துள்ளது.

நடப்பு நிதி ஆண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 6.3 சதவீதமாக இருக்கும் - உலக வங்கி கணிப்பு!

KarthigaBy : Karthiga

  |  6 April 2023 12:46 AM GMT

2023 - 2024 ஆம் நிதி ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.3 சதவீதமாக இருக்கும் என்று உலக வங்கி கணியுள்ளது .முன்பு 6.6 சதவீத வளர்ச்சி இருக்கும் என்று கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இது குறித்து உலக வங்கி தனது அறிக்கையில், அதிகரித்து வரும் கடன் சுமை வருமானத்தில் மெதுவான வளர்ச்சி ஆகியவற்றால் தனியாரின் நுகர்வு குறைந்துவிடும்.

கொரோனாவுக்காக அளிக்கப்பட்ட நிதி ஆதாரங்கள் வாபஸ் பெறப்பட்டதால், அரசின் நுகர்வும் மெதுவாகவே இருக்கும்.குறைவான பொருளாதார வளர்ச்சிக்கு இதுவே காரணங்கள் என்று கூறியுள்ளது. அதே சமயத்தில் நடப்பு கணக்கு பற்றாக்குறை 3 சதவீதத்திலிருந்து 2.1 சதவீதமாகவும் பணவிக்கம் 6.6 சதவீதத்தில் இருந்து 5.2 சதவீதமாகவும் குறையும் என்று உலக வங்கி கணித்துள்ளது.




Next Story
கதிர் தொகுப்பு
Trending News