இந்தியாவில் முதல்முறையாக உருவாக்கப்பட்ட புற்றுநோய்க்கான மரபணு சிகிச்சை மையம்!
இந்தியாவில் முதல் முறையாக உருவாக்கப்பட்ட புற்றுநோய்க்கான மரபணு சிகிச்சை மையத்தை ஜனாதிபதி திரௌபதி முர்மு திறந்து வைத்தார்.
By : Karthiga
புற்று நோய்க்காக இந்தியாவில் முதல்முறையாக உருவாக்கப்பட்ட மரபணு அடிப்படையில் சி.ஏ.ஆர்.டி செல் சிகிச்சை முறையை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வியாழக்கிழமை தொடங்கி வைத்தார். மும்பை ஐ டி மற்றும் டாடா அறக்கட்டளை இணைந்து உள்நாட்டில் உருவாக்கப்பட்ட நெக்ஸ் சி ஏ.ஆர். 99 சிகிச்சை முறை பலவகை புற்று நோய்களை குணப்படுத்தும். அதற்கான சிகிச்சை செலவையும் வெகுவாக குறைக்கும் என்பது குறிப்பிடத்தக்கதாகும். மும்பை ஐ.ஐ.டி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த சிகிச்சை முறையை தொடங்கி வைத்து குடியரசு தலைவர் பேசுகையில் மருத்துவ அறிவியல் ஆராய்ச்சியின் அற்புதமான முன்னேற்றமாக கருதப்படுகிறது.
இந்தியாவிலேயே முதல்முறையாக உருவாக்கப்பட்ட இச்சிகிச்சைமுறை இந்தியாவில் தயாரிப்போம் முன்னெடுப்பில் முக்கிய எடுத்துக்காட்டாகும். மேலும் இந்திய விஞ்ஞானிகள் மற்றும் மருத்துவர்கள் பெருமையும் இது எடுத்துரைக்கிறது. இந்தியாவின் முதல் மரபணு சிகிச்சை முறையின் தொடக்கம் புற்றுநோக்கு எதிரான நமது போரில் ஒரு முக்கிய திறப்பு முறையாகும். நமது சி.ஏ.ஆர்.டி செல் சிகிச்சை முறை அணுக கூடியது மற்றும் மலிவானது என்பதால் முழு மனித குலத்துக்கும் ஒரு புதிய நம்பிக்கையை இது வழங்குகிறது என்றார்.
டாடா அறக்கட்டளையின் இயக்குனர் சுதீப் குப்தா கூறுகையில், சி.ஏ.ஆர். டி செல்சிகிச்சை முறையானது விலை உயர்ந்த சிகிச்சையாகவும் பெரும்பான்மையான மக்களால் அணுக முடியாததாகவும் இருக்கிறது. வெளிநாட்டில் கிடைக்கும் விலையில் ஏறத்தாழ பத்தில் ஒரு பங்கு விலையில் நெக்ஸ் சி ஏ ஆர் 19 இந்தியாவில் தொடங்கப்பட்டுள்ளது என்றார். மும்பை ஐஐடி இயக்குனர் சுபா அசிஸ் சவுதரி கூறுகையில் ,வெளிநாட்டில் சி.ஏஆர்.டி செல்சிகிச்சைக்கு ரூபாய் 4 கோடி செலவாகிறது.
நாம் உருவாக்கியுள்ள இந்த குறைந்த விலை சிஏஆர்டி செல் சிகிச்சையானது நமது நாட்டுக்கும் இந்தியாவில் உள்ள புற்றுநோயாளிகளுக்கும் உரித்தான மிகப்பெரிய சாதனையாகும் .மிக உயர்ந்த அறிவியல் சாதனம் மட்டுமின்றி மகத்தான நடைமுறை பயன்பாட்டையும் கொண்டுள்ள நெக்ஸ் சி.ஏஆர. 90 பல உயிர்களை காப்பாற்றுவதோடு பலரின் கண்ணீரை துடைக்கும் மேலும் உலகளாவிய செல் மற்றும் மரபணு சிகிச்சையில் இந்தியாவை நிலை நிறுத்தும் என்றார்.
SOURCE :Dinamani