Kathir News
Begin typing your search above and press return to search.

அமெரிக்காவிலும் புகழ் பெற்ற இந்தியாவின் இரும்பு மனிதர்- வாஷிங்டனில் அம்பேத்கர் சிலை!

வாஷிங்டன்: அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்தில் 19 அடி உயர அம்பேத்கர் சிலை வரும் அக்.14 ஆம் தேதி திறக்கப்பட உள்ளது.

அமெரிக்காவிலும் புகழ் பெற்ற இந்தியாவின் இரும்பு மனிதர்- வாஷிங்டனில் அம்பேத்கர் சிலை!
X

KarthigaBy : Karthiga

  |  3 Oct 2023 5:30 PM GMT

அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்தின் அக்கோகீக் நகரத்தில் அம்பேத்கர் சர்வதேச மையத்துக்கு (ஏஐசி) சொந்தமான 13 ஏக்கர் நிலத்தில் அம்பேத்கர் சிலை உருவாக்கப்பட்டுள்ளது. குஜராத்தின் அகமதாபாத்தில் அமைந்துள்ள மிகப்பெரிய சர்தார் வல்லபாய் படேல் சிலையை உருவாக்கிய புகழ்பெற்ற சிற்பி ராம் சுடார், இந்த அம்பேத்கர் சிலையையும் உருவாக்கியுள்ளார். இந்த சிலைக்கு ‘சமத்துவத்தின் சிலை’ (Statue of Equality) என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு வெளியே இருக்கும் அம்பேத்கர் சிலைகளில் மிக உயரமான சிலை இதுவாகும்.

வரும் அக்டோபர் 14-ஆம் தேதி இந்த 19 அடி உயர அம்பேத்கர் சிலையும் திறக்கப்பட உள்ளது. இந்த சிலை திறப்பு நிகழ்வில் அமெரிக்கா மற்றும் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர். இந்த நினைவுச்சின்னம் அம்பேத்கரின் போதனைகளை பரப்பவும், சமத்துவம் மற்றும் மனித உரிமைகளின் சின்னமாக விளங்கவும் உதவும் என்று ஏ.ஐ.சி தெரிவித்துள்ளது.

SOURCE :hindutamil.com

Next Story
கதிர் தொகுப்பு
Trending News