Kathir News
Begin typing your search above and press return to search.

குலை நடுங்கும் சீனா! நம்முடைய எல்லையில் சீனா நுழையவில்லை என்று பிரதமர் மோடி சொன்னதன் பின்னால் உள்ள காரணம் இது தான்!

குலை நடுங்கும் சீனா! நம்முடைய எல்லையில் சீனா நுழையவில்லை என்று பிரதமர் மோடி சொன்னதன் பின்னால் உள்ள காரணம் இது தான்!

குலை நடுங்கும் சீனா! நம்முடைய எல்லையில் சீனா நுழையவில்லை என்று பிரதமர் மோடி சொன்னதன் பின்னால் உள்ள காரணம் இது தான்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  20 Jun 2020 4:16 AM GMT

நம்முடைய எல்லையில் சீனா நுழையவில்லை. நம்முடைய border post எதையும் கைப்பற்றவில்லை என்று நேற்று பிரதமர் சொன்னதை கேட்டு நானும் குழம்பினேன். பிறகு எதனால் இந்த சண்டை என்று. ஒரு சில ஆசாமிகள் அப்பொழுது அந்த ஆக்கிரமித்த இடங்களை சீனாவிற்கு விட்டுக்கொடுத்துவிட்டீர்களா என்கிற வண்ணத்தில் கேள்வி கேட்டு மோடி வெறுப்பு பிரச்சாரம் செய்தார்கள்.. அதனால் இன்னும் கொஞ்சம் ஆழமாக படித்து பார்த்தேன். விஷயம் இதுதான் என்பதை தெளிவு படுத்தியுள்ளார் அரசியல் ஆர்வலர் விஜி ஸ்ரீ ராம்.





மேலே உள்ள படத்தை பாருங்கள். லடாக்கில் உள்ள Pangong Tso lake ஐ ஒட்டி உள்ள மலைப்பகுதிகளில் பல point கள் இருக்கிறது.. அங்கே உள்ள ஒவ்வொரு point யும் finger என்று சொல்வார்கள். நாம் நமது border post ஐ Finger 3 க்கும் Finger 4 க்கும் நடுவே அமைத்திருக்கிறோம். அதாவது நாம் இது வரை Finger 4 வரைதான் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறோம். ஆனால் காலம் காலமாக ரோந்து பணிகளை Finger 8 வரை மேற்கொள்கிறோம்.

Finger 8 ஐ தாண்டிதான் China border post இருக்கிறது. அவர்களும் இவ்வளவு நாட்கள் Finger 3 வரை ரோந்து பணிகளை மேற்கொள்வார்கள். இப்பொழுது அங்கே நம்முடைய உட்கட்டமைப்பு (Finger 4 அருகே அமைத்து வரும் சாலைகள்) வசதிகளை பார்த்து எங்கே நாம் சீன ஆக்கிரமிப்பு லடாக் பகுதியான Akshai Chin ஐ மீண்டும் கைப்பற்றிவிடுவோமோ என்று பயப்படுகிறார்கள் (அமித் ஷா சில நாட்கள் முன்பு ஆக்கிரமிப்பு காஷ்மீரை எப்படியாவது மீட்போம் என்று சொன்னார், அது சீன ஆக்கிரமிப்பு காஷ்மீரையும் சேர்த்துதான்)..

இந்த பகுதி பாகிஸ்தானையும் சீனாவையும் வர்த்தகரீதியாக இணைக்க கட்டப்படும் பொருளாதார மண்டலத்திற்க்கு அவர்களுக்கு முக்கியமானது.. அது பாதிக்க படுமோ என்று பயப்படுகிறார்கள்.

அதனால் இப்பொழு Finger 4 அருகே bunker அமைத்து, நம்மை Finger 8 வரை நம்மை ரோந்து பணிகளை மேற்கொள்ளவிடாமல் தடுக்கிறார்கள். அது தங்களுடைய பகுதி என்கிறார்கள். அங்கே எல்லைக்கோடு என்று ஒன்று வரையப்படவில்லை (physically). அந்த இடம் நம்முடையது என்கிறோம்.

ஆனால் நடைமுறையில் நாம் இருவருமே அந்த Finger 4 லிருந்து Finger 8 வரை நடமாடுகிறோம்... இப்பொழுது அவர்கள் நம்மை தடுப்பதுதான் தகராறு. ஆனால் நடைமுறையில் இந்தியா கட்டுப்பாட்டில் உள்ள Finger 4 ஐ தாண்டி அவர்கள் வரவில்லை. இதைத்தான் பிரதமர் சொன்னார்.

ஆனால் பழையபடி Finger 8 வரை நாங்கள் ரோந்து பணிகளை மேற்கொள்வோம் என்று இந்தியா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது... உடன்பாடு ஏற்படவில்லை என்றால் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை இந்திய ராணுவம் மேற்கொள்ளும். அதற்கான முழு சுதந்திரத்தையும் நாங்கள் ராணுவத்திற்கு கொடுத்திருக்கிறோம் என்று பிரதமர் தெளிவுபடுத்தியும் இருக்கிறார்.2 days ago

Daily Express

India's Narendra Modi ordered

Next Story
கதிர் தொகுப்பு
Trending News