Kathir News
Begin typing your search above and press return to search.

அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் ஒலித்த இந்தியாவின் தேசப்பற்று பாடல்!

அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் இந்தியாவின் தேசப்பற்று பாடல் ஓராண்டுக்குள் இரண்டாவது முறையாக ஒலித்தது.

அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் ஒலித்த இந்தியாவின் தேசப்பற்று பாடல்!

KarthigaBy : Karthiga

  |  16 May 2024 2:57 PM GMT

இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான வலிமையான உறவை வெளிப்படுத்தும் நோக்கில் ஓராண்டுக்குள் இரண்டாவது முறையாக இப்பாடல் இசைக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் ஆசிய அமெரிக்கர்களின் பாரம்பரிய மாதத்திற்கான கொண்டாட்ட நிகழ்ச்சி ஒன்று நடந்தது .இதனுடன் ஹவாய் மற்றும் பசிபிக் தீவு பகுதிகளை சேர்ந்தவர்களும் கலந்து கொள்ள அழைப்பு விடப்பட்டு இருந்தது. இந்த வருடாந்திர நிகழ்ச்சியில்கலந்து கொள்ளும்படி அமெரிக்க அதிபர் ஜோபைடன் அழைப்பு விடுத்திருந்த நிலையில் இந்திய அமெரிக்கர்கள் பலரும் நிகழ்ச்சியில் பங்கு கொண்டு சிறப்பித்தனர் .

இதில் இந்தியாவின் சாரே ஜஹான் ஜே அச்சா ஹிந்துஸ்தான் ஹமாரா என்ற பிரபல தேசப்பற்று பாடலை வெள்ளை மாளிகையின் இசை குழுவினர் இசைத்தனர். இந்திய சுதந்திர போராட்டத்தின் போது இந்த பாடலை முகமது இக்பால் எழுதினார் .இந்திய அமெரிக்கர்களின் வேண்டுகோளுக்கு ஏற்ப நிகழ்ச்சியில் இந்த பாடல் இரண்டு முறை இசைக்கப்பட்டது. பிரதமர் மோடி அமெரிக்காவுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்ட போது கடந்த ஆண்டு ஜூன் 23ஆம் தேதி இந்த பாடல் இசைக்கப்பட்டது.

இந்த சூழலில் இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான வலிமையான உறவை வெளிப்படுத்தும் நோக்கில் ஓர் ஆண்டுக்குள் இரண்டாவது முறையாக இப்பாடல் இசைக்கப்பட்டுள்ளது. இந்தியாவை பூர்வீக நாடாகக் கொண்ட அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரீசும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் நடந்த விருந்தின் போது இந்தியாவின் தெருவோரப் பகுதிகளில் பரவலாக விற்கப்படும் பானிபூரி மற்றும் சமோசா உள்ளிட்டவை பரிமாறப்பட்டன. இவற்றை வெள்ளை மாளிகையில் தயாரித்து இருந்தனர்.


SOURCE :Dinamani

Next Story
கதிர் தொகுப்பு
Trending News