மத்திய அரசின் அதிரடி நடவடிக்கைகளால் பணவீக்கம் கட்டுப்பாட்டில் இருக்கிறது- நிர்மலா சீதாராமன் தகவல்!
மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகளால் பணவீக்கம் கட்டுக்குள் வந்துள்ளது என்று நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
By : Karthiga
நாடாளுமன்ற மாநிலங்களவையில் மத்திய நிதி மந்திர நிர்மலா சீதாராமன் ஒரு கேள்விக்கு பதில் அளித்தார். அவர் கூறியதாவது :-
நாட்டின் சில்லறை பணவீக்க விகிதம் கடந்த டிசம்பர் மாதத்தில் 5.69 சதவீதமாக இருந்தது. பணவீக்கம் இரண்டு சதவீதம் முதல் ஆறு சதவீதத்துக்குள் இருப்பது சகித்துக் கொள்ள கூடியதாக இருக்கும். என்று மத்திய அரசு ஏற்கனவே கூறியுள்ளது. அந்த வரம்புக்குள் பணவீக்கம் வந்துள்ளது.விலைவாசியை கட்டுப்படுத்த மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் தான் இதற்கு காரணம்.
உதாரணமாக வெங்காயம் விலை ஏற்ற இறக்கமாக இருப்பதை கட்டுப்படுத்த மத்திய அரசு தனது கையிருப்பை 7 லட்சம் டன்னாக உயர்த்தியது. கடந்த மூன்றாம் தேதி நிலவரப்படி 6.32 லட்சம் டன் வெங்காயம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. அவற்றில் 3.96 லட்சம் டன் முதல் தர வெங்காயம், சில்லறை மொத்த விற்பனை மற்றும் ஏல விற்பனை விடுவிக்கப்பட்டது. வெங்காயம் போன்ற அழுகக்கூடிய பொருட்களை பாதுகாத்து வைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன .அவற்றின் விநியோகத்தில் ஏற்படும் குறைகளை கலையவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
கடந்தாண்டு இந்தியா 8.79 லட்சம் டன் துவரம் பருப்பும் , 15.14 லட்சம் டன் மசூர் பருப்பும் இறக்குமதி செய்யப்பட்டன. இதுபோல் மற்ற பருப்புகளும் இறக்குமதி செய்யப்பட்டு சந்தைக்கு அனுப்பப்பட்டன. இது தவிர, 'பாரத் பருப்பு' என்ற பெயரில் மலிவு விலையில் சென்னா பருப்பு , சில்லரை சந்தைகளில் விற்கப்பட்டு வருகிறது. இதுவரை 2.97 லட்சம் டன் சென்னா விற்பனை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
SOURCE :Dailythanthi