Kathir News
Begin typing your search above and press return to search.

ஒருவரின் பெயரில் உள்ள ஒன்றுக்கும் மேற்பட்ட வீட்டு மின் இணைப்புகளை இணைப்பதாக வரும் தகவல் தவறானது - தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மாமான கழகம்

ஒரே நபரின் பெயரில் உள்ள ஒன்றுக்கும் மேற்பட்ட வீட்டு மின் இணைப்புகளை ஒன்றிணைப்பதாக வரும் தகவல் தவறானது என்று தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மான கழகம் தகவல் தெரிவித்துள்ளது.

ஒருவரின் பெயரில் உள்ள ஒன்றுக்கும் மேற்பட்ட வீட்டு மின் இணைப்புகளை இணைப்பதாக வரும் தகவல் தவறானது - தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மாமான கழகம்

KarthigaBy : Karthiga

  |  8 March 2023 10:00 AM GMT

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிரமான கழகத்தில் இதுவரை 99 சதவீதத்துக்கு மேல் வீடு, குடிசை மற்றும் விவசாய மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியானது வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த சில நாட்களில் சமூக வலைதளங்களில் ஒரே வீட்டில் ஒரே நபரின் பெயரில் உள்ள ஒன்றுக்கும் மேற்பட்ட வீட்டு மின் இணைப்புகள் ஒன்றிணைக்கப்படுவதற்காகவே ஆதார் எண் பெறப்பட்டு மின் இணைப்புடன் இணைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது என்ற கருத்து பதியப்பட்டு பரவி வருகிறது. இந்த கருத்து முற்றிலும் தவறானது மற்றும் உண்மைக்கு புறம்பானதாகும்.


தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் கடந்த 9-09-2022 அன்று வெளியிட்ட வீதப்பட்டியலில் மாற்ற ஆணையின் சரத்துகளின்படி, கள ஆய்வின் அடிப்படையில் ஒரே வீட்டில் குடியிருப்பில் ஒரே நபரின் பெயரில் ஒரு குடும்பத்தினரே உபயோகிக்கும் ஒன்றுக்கும் மேற்பட்ட வீட்டு மின் இணைப்புகளை ஒன்றிணைக்க அல்லது அத்தகைய கூடுதல் மின் இணைப்புகளை பொது பயன்பாட்டிற்கான மின் இணைப்பாக மாற்ற உத்தரவு பிறப்பித்திருந்த போதிலும் சில நிர்வாக காரணங்களால் மேற்படி ஒன்றிணைப்பு விகித பட்டியல் மாற்றும் பணி தொடங்க கூடுதல் கால அவகாசம் கோரப்பட்டுள்ளது .


எனவே இது தொடர்பான எந்த ஒரு செயல் உத்தரவும் மின் பகிர்மான வட்டங்களில் உள்ள பிரிவு அலுவலகங்களுக்கு பிறப்பிக்கப்படவில்லை. எனினும் இது குறிப்பிட்ட கால ஆய்வின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட பிரிவு அலுவலரின் கடித வரைவு செயல், ஒரு தனிப்பட்ட நிகழ்வாகும் . இதில் சம்பந்தப்பட்ட அலுவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.= இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.




Next Story
கதிர் தொகுப்பு
Trending News