Kathir News
Begin typing your search above and press return to search.

கேரளா ஆஸ்பத்திரி டாக்டர்களின் மனிதநேயமற்ற செயல் : இப்படியும் கூட அநியாயம் நடக்குமா? டாக்டர்கள் மீது கோர்ட் நடவடிக்கை

விபத்தில் சிக்கியவரை காப்பாற்ற முயற்சிக்காமல் மூளைச்சாவடைந்ததாக கூறி அவரது கல்லீரலை விதியை மீறி அகற்றி வெளிநாட்டினர் ஒருவருக்கு பொருத்தி அநியாயம் நடந்துள்ளது. இது தொடர்பாக கேரளா ஆஸ்பத்திரி மீதும் டாக்டர்கள் மீதும் கோர்ட் நடவடிக்கையில் இறங்கி உள்ளது.

கேரளா ஆஸ்பத்திரி டாக்டர்களின் மனிதநேயமற்ற செயல் : இப்படியும் கூட அநியாயம் நடக்குமா? டாக்டர்கள் மீது கோர்ட் நடவடிக்கை

KarthigaBy : Karthiga

  |  15 Jun 2023 5:45 AM GMT

மாதா, பிதா, குரு , தெய்வம் என்ற வரிசையில் வைத்து போற்றப்பட வேண்டியவர்கள் டாக்டர்கள். ஆனால் கேரளாவில் டாக்டர்கள் நடத்தியுள்ள ஒரு பெரிய தில்லுமுல்லுவை ஒரு டாக்டரே கோர்ட்டின் கவனத்திற்கு கொண்டு சென்று குற்றம் செய்த ஆஸ்பத்திரி டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க காரணமாக இருக்கிறார். இது பற்றிய பதபதைக்க வைக்கும் தகவல்கள் வருமாறு :-


கேரளாவில் 2009 - ஆம் ஆண்டு நவம்பர் 29- ஆம் தேதி அபின் என்பவர் மோட்டார் சைக்கிள் ஓட்டிச் சென்றபோது ஒரு மின் கம்பத்தில் மோதி விபத்து நேரிட்டது. இதில் அவரது தலையில் படுக்காயங்கள் ஏற்பட்டன. உடனடியாக அவர் கொத்தமங்கலம் மார் பேஸ்லியல்ஸ் ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளார். டிசம்பர் 1ஆம் தேதி அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டதாகவும் அவரது முக்கிய உறுப்புகள் அகற்றப்பட்டதாகவும் அவரது கல்லீரல் வெளிநாட்டு நோயாளி ஒருவருக்கு பொருத்தப்பட்டதாகவும் நாளிதழில் செய்தி வெளியானது. அதில் சட்டத்தை மீறி தவறாக சித்தரித்து பாதிக்கப்பட்டவரின் பெற்றோரின் ஒப்புதலை பெற்ற உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நடந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.


இந்த செய்தியை பார்த்து கொல்லத்தைச் சேர்ந்த டாக்டர் கணபதி என்பவர் அங்குள்ள குற்றவியல் முதல் வகுப்பு மேஜிஸ்திரேட் கோர்ட்டில் வழக்கு தொடுத்தார். அந்த வழக்கில் விபத்தை சந்தித்தவருக்கு முறையான சிகிச்சை அளிக்காமல் அவர் மூளைச்சாவடைந்துள்ளதாக கூறி விதிகளை மீறி அவரது உறுப்புகள் பெறப்பட்டு கல்லீரல் வெளிநாட்டினர் ஒருவருக்கு பொருத்தப்பட்டு இருப்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று கூறியிருந்தார் . வழக்கை மேஜிஸ்திரேட் எல்டோஸ் விசாரணைக்கு ஏற்றார். முதல் கட்ட விசாரணையில் வழக்குதாரரின் புகாரில் அடிப்படை ஆதாரம் இருப்பதாக கண்டறிந்து இதில் விதிமுறை மீறிய தனியார் ஆஸ்பத்திரி மற்றும் அதன் எட்டு டாக்டர்கள் மீது கிரிமினலௌ நடவடிக்கை எடுக்க மேஜிஸ்திரேட் முடிவு செய்துள்ளார்.


குற்றச்சாட்டு ஆளானவர்கள் கோர்ட்டில் ஆஜராக சம்மன் அனுப்பவும் அவர் உத்தரவிட்டார். இது தொடர்பாக கோர்ட்டு பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளதாவது:-


இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது மனித உறுப்புகள் மாற்ற சட்டம் 1994 ல் சட்டப்படி நடவடிக்கை எடுப்பதற்கு அடிப்படை ஆதாரமும் போதுமான முகாந்திரங்களும் உள்ளன. இந்த வழக்கு விசாரணைக்கு ஏற்கப்படுகிறது. குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் கோர்ட்டில் ஆஜராக சம்மன் அனுப்ப வேண்டும். பாதிக்கப்பட்ட நபர் இறந்த தனியார் ஆஸ்பத்திரி விபத்துக்கு பிறகு அவர் அழைத்துச் செல்லப்பட்ட இரண்டு ஆஸ்பத்திரிகளில் நரம்பியல் மருத்துவ நிபுணர்கள் மற்றும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர்கள் மீதான குற்றச்சாட்டின் மீது விசாரணை நடத்தப்படும்.


மூளைச் சாவு நடந்துள்ளதாக அறிவிப்பதற்கு முன்பாகவே உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர்கள் விபத்தில் சிக்கிய நபரை பார்த்துள்ளனர். அவரது கல்லீரல் செயல்படுகிறதா? என்பதை பற்றி பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. மூளை சாவு நடந்துள்ளதாக அறிவிப்பதற்கு முன்பாக சம்பந்தப்பட்ட நபருக்கு கட்டாயமாக நடத்த வேண்டிய மூச்சு திணறல் சோதனை நடத்தப்படவில்லை. விபத்தை சந்தித்த நபர் மூளைச் சாவடைந்ததாக வழங்கப்பட்ட இறப்பு சான்றிதழ் விதிமுறைப்படி இல்லை.


இந்த இறப்பு சான்றிதழில் கையெழுத்து போட்டுள்ள டாக்டர்கள் சட்டப்படி கையெழுத்து போடுவதற்கு அதிகாரம் பெற்றவர்கள் அல்ல. விபத்தில் பாதிக்கப்பட்டவரின் கல்லீரல் அங்கீகாரக் குழுவின் அனுமதியை பெறாமல் வெளிநாட்டினர் ஒருவருக்கு பொருத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது . எனவே இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள எர்ணாகுளம் லேசர் ஆஸ்பத்திரி மற்றும் நடந்துள்ள குற்றத்தில் தொடர்புடைய எட்டு டாக்டர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படுகிறது . இது கேரளாவில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News