Kathir News
Begin typing your search above and press return to search.

தி.மு.க வுக்கு செக்: காஷ்மீர் விவகாரம் ஸ்டாலின் பேசிய வீடியோக்களை சேகரிக்க உளவுத்துறை உத்தரவு !

தி.மு.க வுக்கு செக்: காஷ்மீர் விவகாரம் ஸ்டாலின் பேசிய வீடியோக்களை சேகரிக்க உளவுத்துறை உத்தரவு !

தி.மு.க வுக்கு செக்: காஷ்மீர் விவகாரம் ஸ்டாலின் பேசிய வீடியோக்களை சேகரிக்க உளவுத்துறை உத்தரவு !
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  2 Oct 2019 3:51 AM GMT


தமிழகத்தில் தி.மு.க மற்றும் அதன் கூட்டணிகள் தொடர்ந்து பொய்யான கருத்துக்களை மக்களிடம் பரப்புவதாகவும் அவதூறான கருத்துக்களை சிறிய கட்சிகளிடம் சொல்லி பரப்புவதாகவும் உளவுத்துறைக்கு அடிக்கடி தகவல் சென்று சென்று வந்தது.


இதனிடையில் காஷ்மீர் சிறப்பு சட்டம் நீக்கப்பட்டதை எதிர்த்து டெல்லியில் தி.மு.க மற்றும் அதன் கூட்டணிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாணவி ஷெஹ்லா ரஷீத் கலந்து கொண்டு பேசினார். காஷ்மீர் மாநிலத்த்தை சேர்ந்தவர். இவர் டெல்லி பல்கலைக்கழகத்தில் பயின்று வருகிறார்.


ஷெஹ்லா ரஷீத் இந்திய இராணுவத்தினரை தரக்குறைவாக விமர்சித்து வந்தவர். அது மட்டுமில்லாமல் இவர் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசி வருகிறார். பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் பயங்கரவாதிகளை ஆதரிக்கும் விதமாகவும் பேசி வருவதால் ஷெஹ்லா ரஷீத் மீது பயங்கரவாதத் தடைச்சட்டத்தை பயன்படுத்தி கைது செய்ய காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.


மாணவி ஷெஹ்லா ரஷீத் கைது செய்த பிறகு தி.மு.கவால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் யார் அழைத்தது என விசாரித்து அழைத்தவர் மீது உபா சட்டத்தின் அடிப்படையில் கைது செய்ய முடிவெடுத்துள்ளது உளவுத்துறை.


இதுமட்டுமில்லமால் இவர் தரும் வாக்குமூலத்தை வைத்து தீவிரவாதத்திற்கு ஆதரவாக இருந்து வரும் ஒருவரை ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு விருந்தினராக அழைத்த தி.மு.க-வின் மீதும் வழக்கு போடவுள்ளது உளவுத்துறை.


2021 இல் சட்டப்பேரவைக்கு தேர்தலுக்கு முன் ஸ்டாலின் மீது பல வழக்குகள் பாயவுள்ளது இதற்கு தகுந்த ஆதாரங்களை சத்தமில்லாமல் சேகரித்து வருகிறது உளவுத்துறை . இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியது, தனி நாடு கேட்ட விவகாரம், ஊழல் வழக்குகள், என பல தகவல்களையும் சேகரித்து வருகிறது உளவுத்துறை. கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் பேசிய வீடியோக்களையும் சேகரிக்க உத்தரவிட்டுள்ளது உளவுத்துறை.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News