Kathir News
Begin typing your search above and press return to search.

குஜராத்தில் சர்வதேச பட்டம் விடும் திருவிழா தொடங்கியது - பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் குஜராத்தில் வளர்ச்சிப் பட்டம் புதிய உயரங்களை கடந்து வருகிறது என முதல் மந்திரி புகழாரம்

குஜராத்தில் சர்வதேச பட்டம் விடும் திருவிழா தொடங்கியது. இதில் 68 நாடுகள் பங்கேற்றன.

குஜராத்தில் சர்வதேச பட்டம் விடும் திருவிழா தொடங்கியது - பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் குஜராத்தில் வளர்ச்சிப் பட்டம் புதிய உயரங்களை கடந்து வருகிறது என முதல் மந்திரி புகழாரம்

KarthigaBy : Karthiga

  |  9 Jan 2023 11:30 AM GMT

இந்த ஆண்டுக்கான சர்வதேச பட்டம் விடும் திருவிழா குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் நேற்று தொடங்கியது. அங்குள்ள சபர்மதி நதிக்கரையில் இந்த விழாவை முதல் மந்திரி பூபேந்நிர படேல் தொடங்கி வைத்தார். இந்த திருவிழாவில் ஆஸ்திரேலியா, கனடா, பிரான்ஸ், ரஷ்யா , ஜெர்மனி, மெக்சிகோ உள்ளிட்ட 68 நாடுகளைச் சேர்ந்த 125 பட்டம் விடுவோர் பங்கேற்கிறார்கள். அத்துடன் இந்தியாவின் 14 மாநிலங்களைச் சேர்ந்த 65 பேர் மற்றும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 600 பட்டம் விடுவோர் பங்கேற்கிறார்கள்.


ஜி 20 அமைப்பின் கருப்பொருளான 'ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்' என்ற தலைப்பில் இந்த விழா நடைபெறுகிறது. ஆமதாபாத் தவிர குஜராத்தின் வதோதரா, வேத்நகர், சோம்நாத், ராஜ்கோட் உள்ளிட்ட இடங்களிலும் இந்த திருவிழா நடத்தப்படுகிறது. நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசிய முதல் மந்திரி பூபேந்திரபடியில் பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் குஜராத்தின் வளர்ச்சி பட்டம் கடந்த 20 ஆண்டுகளாக புதிய உயரங்களை கடந்து வருகிறது என கூறினார்.






Next Story
கதிர் தொகுப்பு
Trending News