ரசிகர்கள் இன்றி ஐ.பி.எல் போட்டியை நடத்த திட்டம் - கங்குலி #ipl2020
ரசிகர்கள் இன்றி ஐ.பி.எல் போட்டியை நடத்த திட்டம் - கங்குலி #ipl2020

இந்த ஆண்டு ஐ.பி.எல் போட்டிகளை ரசிகர்கள் இன்றி நடத்த திட்டமிட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் கங்குலி கூறியுள்ளார்.
மேலும், கங்குலி மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு இ-மெயில் மூலம் அனுப்பிய தகவலானது, "இந்த ஆண்டு ஐ.பி.எல் போட்டிகள் நடத்துவதற்க்குறிய எல்லா விதமான சாத்தியக்கூறுகளையும் ஆராய்ந்து வருகிறோம் இதில் ரசிகர்கள் இன்றி காலி மைதானத்தில் போட்டியை நடத்தும் திட்டம் கூட அடங்கும். உரிமையாளர்கள், வீரர்கள், ஒளிபரப்புதாரர்கள், விளம்பரதாரர்கள் என சிலர் மட்டுமே மைதானத்தில் இருக்கும்படி நடத்த முடியும் என நம்புகிறோம், விரைவில் இதற்க்கான அறிப்பு வெளியாகும் என குறிப்பிடபட்டுள்ளது.
ஐ.பி.எல் சேர்மன் பிரிஜேஷ் பட்டேல் இதுபற்றி கூறுகையில் "ஐ.பி.எல் தொடரை இதுபோல் நடத்த வாய்ப்புகள் இருக்கும் பட்சத்தில் செப்டம்பர் மற்றும் அக்டோபர்'ல் நடத்தலாம் என தெரிவித்துள்ளார்