சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த 16 இந்திய மாலுமிகளை விடுவித்தது ஈரான் அரசு!
சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த இந்திய மாலூமிகள் 16 பேர் உட்பட 24 பேரை சுமார் 20 நாட்களுக்கு பிறகு ஈரான் அரசு விடுவித்துள்ளது.
By : Karthiga
சிரியாவிலுள்ள ஈரான் தூதரகம் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில் ஈரானின் இஸ்லாமிய புரட்சிப்படையைச் சேர்ந்த மூன்று முக்கிய அதிகாரிகள் உட்பட 12 பேர் கொல்லப்பட்டனர் .இதற்கு பதிலடியாக இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. மேலும் கடந்த மாதம் 13ம் தேதி ஓமன் வளைகுடா அருகில் ஹார்மோஸ்ட் ஜல சந்தியை ஒட்டிய பகுதியில் இஸ்ரேல் தொடர்புடைய எம் எஸ் சி ஏரிஸ் என்ற சரக்கு கப்பலை ஈரான் சிறை பிடித்தது .
அந்த கப்பலில் 17 இந்தியர்கள் உட்பட 25 மாலுமிகள் இருந்தனர். இந்திய மாலுமிகளை மீட்க ஈரானுடன் இந்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. இதற்கிடையே ஒரு இந்திய ஆளுமை மட்டும் விடுவிக்கப்பட அவர் நாடு திரும்பினார் .இந்த நிலையில் சுமார் 20 நாட்களுக்குப் பிறகு 16 இந்திய மாலுமிகள் உட்பட கப்பலில் இருந்த 24 பேரையும் ஈரான் விடுவித்துள்ளது.
இது தொடர்பாக ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹுசைன் அமீரா பக்துல்லஹியன் கூறுகையில் இஸ்ரேலுக்கு தொடர்புடையதாக கடந்த மாதம் சிறைபிடிக்கப்பட்ட எம் எஸ் சி ஏரி சரக்கு கப்பலில் பணிபுரிந்த அனைத்து மாலுமிகளும் விடுவிக்கப்பட்டனர். மாலுமிகளின் விடுதலையானது ஈரானின் மனிதாபிமான நடவடிக்கையாகும். கப்பலின் கேப்டன் தலைமையில் மாலுமிகள் அனைவரும் அவரவர் சொந்த நாட்டுக்கு திரும்பலாம். ஆனால் கப்பல் மட்டும் ஈரான் காவல் நிலையத்தில் இருக்கும் என்று கூறினார்.