Kathir News
Begin typing your search above and press return to search.

இளம் வயதிலேயே பிரதமர் ஆன அயர்லாந்தின் புதிய பிரதமர் சைமன் ஹாரிஸ்- பிரதமர் மோடி வாழ்த்து!

அயர்லாந்தின் புதிய பிரதமராக 37 வயதான சைமன் ஹாரிஸ் நேற்று முன்தினம் பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இளம் வயதிலேயே பிரதமர் ஆன அயர்லாந்தின் புதிய பிரதமர் சைமன் ஹாரிஸ்- பிரதமர் மோடி வாழ்த்து!
X

KarthigaBy : Karthiga

  |  11 April 2024 12:59 PM GMT

அயர்லாந்து பிரதமராக இருந்து வந்த லியோ வராத்கர் கடந்த மாதம் திடீரென பதவி விலகியதைத் தொடர்ந்து 'ஃபைன்கேல்' கட்சியின் புதிய தலைவராக சைமன் ஹாரிஸ் போட்டி இன்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில் புதிய பிரதமரை தேர்வு செய்வது குறித்து அந்நாட்டு நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் சைமன் ஹாரிஸ்க்கு ஆதரவாக 88 வாக்குகளும் எதிராக 69 வாக்குகளும் பதிவாகின.

வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அந்நாட்டின் தலைநகர் டூப்ளினில் உள்ள அதிபர் மாளிகையில் புதிய பிரதமராக 37 வயதான சைமன் ஹாரிஸ் பதவி ஏற்று கொண்டார். இவர் முன்னாள் சுகாதார மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் ஆக பதவி வகித்தவர் .கொரோனா பேரிடர் காலத்தில் சைமன் ஹாரிஸ் திறம்பட செயலாற்றினார். இந்நிலையில் மிக இளம் வயதில் பிரதமர் பதவியேற்றுள்ள சைமன் ஹரிசுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார் .

இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், 'சைமன் ஹாரிஸ் அயர்லாந்தின் மிக இளம் வயது பிரதமராக தேர்வாகியுள்ளதற்கு வாழ்த்துக்கள். ஜனநாயக விழுமியங்களில் நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்ட நமது வரலாற்று உறவுகள் உயர்ந்த மதிப்புக்குரியது.இந்தியா அயர்லாந்து இருதரப்பு கூட்டுறவை மேலும் வலுப்படுத்த இணைந்து செயல்படுவோம் என குறிப்பிட்டுள்ளார். சைமன் ஹாரிஸ் 26 வயதில் பல்கலைக்கழக படிப்பை பாதியில் கைவிட்டு அரசியலுக்குள் நுழைந்தார். 24 வயதில் அந்நாட்டு நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 30 வயதை எட்டுவதற்கு உள்ளாகவே அமைச்சரவையில் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.


SOURCE :Varalaru

Next Story
கதிர் தொகுப்பு
Trending News