Kathir News
Begin typing your search above and press return to search.

வாழ்நாள் முழுவதும் தேசியத்தை சுவாசித்த இரும்பு பெண்மணி - சுஷ்மா ஸ்வராஜ் #SushmaSwaraj

வாழ்நாள் முழுவதும் தேசியத்தை சுவாசித்த இரும்பு பெண்மணி - சுஷ்மா ஸ்வராஜ் #SushmaSwaraj

வாழ்நாள் முழுவதும் தேசியத்தை சுவாசித்த இரும்பு பெண்மணி - சுஷ்மா ஸ்வராஜ் #SushmaSwaraj
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  6 Aug 2019 7:27 PM GMT


1952 ஆம் ஆண்டு, பிப்ரவரி 14 ஆம் நாள், திரு ஹரதேவ் ஷர்மா மற்றும் திருமதி லக்ஷ்மி தேவி ஆகியோருக்கு மகளாக பிறந்தவர் தான் திருமதி சுஷ்மா ஸ்வராஜ். இவரது தந்தை சிறு வயதிலிருந்தே ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் இருந்தவர்.


சமஸ்கிருதம் மற்றும் பொலிட்டிக்கல் சயின்ஸ் பிரிவுகளில் பட்டம் பெற்ற இவர், சட்டமும் பயின்றார். ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மாணவர் அமைப்பான அகில பாரத வித்யா பரிஷத்(ABVP) -யில் 1970 முதல் சேவை புரியத் துவங்கினார். 1973 முதல் உச்ச நீதிமன்ற வழக்கறிஞராக பணியாற்ற துவங்கினார்.


இந்திரா காந்தி ஆட்சி செய்த போது, காங்கிரஸ் அரசு கொண்டுவந்த நெருக்கடி நிலையால் பல இன்னல்களை சந்தித்த இவர், பா.ஜ.க-வில் இணைந்து படிப்படியாக உயரத் துவங்கினார்.


1977 முதல் 1982 வரை மற்றும் 1987 முதல் 1990 வரை இரண்டு முறை எம்.எல்.ஏ-வாக இருந்துள்ளார். 1977-இல் ஹரியானா மாநில அமைச்சரவையில் பங்குபெற்றார். 1979 ஆம் ஆண்டு ஹரியானா மாநில பா.ஜ.க தலைவராக பொறுப்பேற்றார்.


1990 ஆம் ஆண்டு ராஜ்யசபா எம்.பி-யாக பதவி ஏற்றார்.1998 ஆம் ஆண்டு டெல்லியின் முதல் பெண் முதலமைச்சராக பதவி ஏற்றார்.


தகவல் தொடர்பு துறை, தொலைத்தொடர்பு துறையை, சுகாதாரத்துறை, குடும்பம் நலத்துறை, வெளியுறவு துறை என பல்வேறு துறைகளில் அமைச்சராக இருந்துள்ளார். இவர் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த போது தான் போபால், ஒடிசா, ராஜஸ்தான், பீகார், சட்டிஸ்கர்,உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைத்தார்.


கடந்த பா.ஜ.க ஆட்சியில், பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்தார். இன, மத வேறுபாடின்றி உலகெங்கும் வாழும் இந்தியர்களின் பாதுகாப்பை ஒரு வெளியுறவுத்துறை அமைச்சராக உறுதி செய்தார். ட்விட்டர் மூலம் அனைத்து இக்கட்டான பிரச்சனைகளுக்கும் எளிதில் தீர்வு கண்டார். அவர் இந்த முறை அமைச்சர் பதவி வேண்டாம் என்று கூறி தேர்தலில் நிற்காமல் தவிர்த்தார். இவரது உடல் அப்போதே அரசியலுக்கு ஒத்துழைக்கவில்லை.


இந்த நிலையில் நேற்று இரவு அவருக்கு திடீர் என்று மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். அவருக்கு தற்போது 67 வயதாகிறது.


தீவிர சிகிச்சை பிரிவில் அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். இதையடுத்து எய்ம்ஸ் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். இவரது உடலுக்கு முக்கிய தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.


இந்த நிலையில், அவர் பதிவிட்ட கடைசி ட்வீட் இந்தியர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது. ஜம்மு காஷ்மீரில் 370 வது பிரிவை தடை செய்து நாடாளுமன்றத்தில் வெற்றிகரமாக வாக்கெடுப்பு நடந்து முடிந்த நிலையில், பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து ட்வீட் ஒன்றை பதிவிட்டார். அதில் கடைசி வரியாக, "இந்த நாளுக்காக தான் எனது வாழ்நாள் முழுவதும் காத்திருந்தேன்" என்று பதிவிட்டு சில மணிநேரங்களில் மறைந்துவிட்டார்.




https://twitter.com/SushmaSwaraj/status/1158737840752037889?s=19

Next Story
கதிர் தொகுப்பு
Trending News