சிறந்தளவில் இரும்புச்சத்து நிறைந்த உணவுகள் இவைதான் !
அதிக அளவு இரும்பு சத்து கொண்ட உணவுகள் பற்றிய ஒரு தொகுப்பு.
By : Bharathi Latha
இரும்பு என்பது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் தேவையான, பல்வேறு வகையான தாதுக்களுள் ஒன்றாகும். உடலின் பல்வேறு அத்தியாவசிய செயல்பாடுகளைச் செய்ய இரும்புச்சத்து தேவைப்படுகிறது. இரும்பு ஒரு அத்தியாவசிய ஊட்டச்சத்து என்பதால், இதனை நம் அன்றாட உட்கொள்ளும் உணவில் இருந்து பெற வேண்டும். இரும்புச்சத்து உட்கொள்ளல், உடலின் செயல்பாடுகளுக்கு பயன்படுத்தப்படும் இரும்பின் அளவை விட குறைவாக இருக்கும்போது உடலில் இரும்புச்சத்து குறைபாடு ஏற்படுகிறது. இரும்புச்சத்துக் குறைபாட்டின் காரணமாக உடலில் இரத்த சோகையை ஏற்படுத்துகிறது, இதன் விளைவாக சோர்வு ஏற்படுகின்றது. மாதவிடாய் காலத்தில் பெண்களின் உடலில் இரத்தப்போக்கு இருப்பதால், பெண்கள் இரத்த சோகை அபாயத்தில் உள்ளனர். இது போன்ற சமயங்களில் இரும்புச்சத்து நிறைந்த உணவுப் பொருட்களை உட்கொள்ள வேண்டும்.
கீரையில் அதிகளவில் ஆராக்கிய நன்மைகள் உள்ளன. மற்றும் இதில் குறைவான அளவிலேயே கலோரிகள் உள்ளன. சுமார் 3.5 அவுன்ஸ் கீரையில் 2.7 மில்லிகிராம் இரும்பு உள்ளது. கீரையில் இருக்கும் இரும்புசத்துக்களை உடலால் எளிதில் உறிஞ்ச முடிகிறது. கீரையில் வைட்டமின் சி நிறைந்துள்ளது, இது உடலில் இரும்புச்சத்து உறிஞ்சுதலை கணிசமாக அதிகரிக்கிறது. கரோட்டின் எனப்படும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் கீரையில் காணப்படுகின்றன, இவை புற்றுநோயைத் தடுக்கின்றன, வீக்கத்தைக் குறைக்கின்றன மற்றும் கண்களை பராமரிக்கின்றன. ஆலிவ் எண்ணெய் போன்ற ஆரோக்கியமான எண்ணெயுடன் கீரை மற்றும் பிற பச்சைக் காய்கறிகளை உட்கொள்வதன் மூலம், உடலில் கரோட்டினாய்டுகளை அதிகரிக்க இயலும்.
ஒரு கப் கருப்பு அவரையில் 10% இரும்புச்சத்து உள்ளது. பருப்பு வகைகளில் ஃபோலேட், பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் ஆகியவை போதுமான அளவில் உள்ளன. நீரிழிவு நோயாளிகளில் வீக்கத்தைக் குறைக்க இவை உதவுகிறது. இவை வளர்சிதை மாற்ற நோய்க்குறியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, இருதயம் தொடர்பான நோய்களின் அபாயத்தைக் குறைக்கின்றன. பல்வேறு பருப்பு வகைகளில் கரையக்கூடிய ஃபைபர்கள் நிறைந்துள்ளன. ப்ரோக்கோலியில் நம்பமுடியாத அளவிற்கு ஏராளமான ஊட்டசத்து கூறுகள் நிறைந்துள்ளன. சுமார் 1 கப் சமைக்கபட்ட ப்ரோக்கோலியில் 1 மில்லிகிராம் இரும்புச்சத்து 6% உள்ளது. வைட்டமின் C உள்ளது. நாள் ஒன்றுக்கு ஒரு ப்ரோக்கோலியை உட்கொள்வதன் மூலம், நம் உடல் இரும்புச்சத்தை திறமையாக உறிஞ்சுகிறது. டார்க் சாக்லேட் மற்றும் பால் பவுடரில் அகாய் பெர்ரி மற்றும் அவுரிநெல்லிகளை விட அதிக அளவு ஆக்ஸிஜனேற்றங்கள் இருப்பதாக ஒரு ஆய்வு கூறுகின்றது.
இன்புட் Medical News Today
Image courtesy:wikipedia