வெறுப்பினை சுமந்து வாழ்வது தான் கம்யூனிச கொள்கையா? வெறுப்பு அரசியலில் நாகரீகத்தையும், பண்பையும், மனிதத்தையும் தொலைத்துவிட்டாரா தோழர் நல்லக்கண்ணு?
வெறுப்பினை சுமந்து வாழ்வது தான் கம்யூனிச கொள்கையா? வெறுப்பு அரசியலில் நாகரீகத்தையும், பண்பையும், மனிதத்தையும் தொலைத்துவிட்டாரா தோழர் நல்லக்கண்ணு?

பிரபல பத்திரிக்கையாளர் திரு.பாண்டே அவர்கள் தந்தி தொலைக்காட்சி -யிலிருந்து வெளியேறி சாணக்யா என்ற சமூக வலைத்தள செய்தி நிறுவனம் ஒன்றை ஆரம்பித்தார். அதன் முதலாம் ஆண்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் திரு.ரஜினிகாந்த், திரு.இலகணேசன் மற்றும் திரு. குமரி ஆனந்தன் ஆகியோர் பங்கேற்றனர்.
இந்நிகழ்வின் ஒரு பகுதியாக சிறந்த அரசியல்வாதிகளுக்கு விருது வழங்கும் விழாவிற்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தமிழக அரசியலில் தேசியம், எளிமை, நேர்மை என்ற தலைப்புகளில் விருதுகள் அறிவிக்கபட்டிருந்தன. தேசியத்திற்கு திரு.இலகணேசன் அவர்களுக்கும், எளிமைக்கு திரு. குமரி ஆனந்தன் அவர்களுக்கும், நேரமைக்கு திரு. நல்லகண்ணு அவர்களுக்கும் என்று முன்பே அறிவிக்கப்பட்டு இருந்தது. இது குறித்த செய்திகள் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டும் வந்தது.
இந்நிலையில் கொள்கை சார்ந்து இந்நிகழ்ச்சியில் திரு. நல்லகண்ணு பங்கேற்கவில்லை மற்றும் அந்த விருதினை பெறவில்லை என்றும் சொல்லப்படுகிறது. இது சமூக வலைத்தள வாசிகளுடமும், பொது மக்களிடத்தும் பெருத்த விவாதத்தையும், கேள்விகளையும் கிளப்பியுள்ளது.
இத்தனை ஆண்டு காலம் திராவிட கட்சிகளுடனும், தேசிய கட்சிகளுடனும் மாறி, மாறி கூட்டணி வைத்த போது கொள்கை சமரசம் செய்தவர் தானே இந்த நல்லக்கண்ணு அப்போது கொள்கை உறுதியோடு எந்த கூட்டணியையாவது புறக்கணித்தாரா? இல்லைதானே, ஆனால் அனைத்து கட்சியினரும் கலந்து கொண்ட அரசியல் சார்பற்ற ஒரு விழாவில் நேர்மைக்காக வழங்கப்படும் விருதினை புறக்கணித்தது அவரின் அரசியல் நற்பண்பை கேள்வி குறியாக்கியுள்ளது.
அது மட்டுமில்லாமல் அரசியலில் நாகரீகம் கருதி, மாற்று சிந்தனை கொண்டவர்களுடன் மேடையை பகிர்ந்து கொள்ளும் பழக்கம் இந்திய அரசியல் வரலாற்றில் பல முறை நடந்துள்ளது. இத்தனை ஆண்டு கால அரசியல் அனுபத்திற்கும் பின்னரும் நல்லகண்ணு அரசியல் நாகரீகம் கற்கவில்லையோ இல்லை வெறுப்பு அரசியலை மூலதனமாக கொண்டு இயங்கும் கம்யூனிச சித்தாந்தத்தில் அதை தொலைத்து விட்டாரா என்று கேட்க தோன்றுகிறது.
ஒரு வேளை மாற்று சிந்தனை கொண்டவர் பாண்டே என்று வைத்துக்கொண்டால் கூட அவரே நல்லகண்ணு அவர்களை மரியாதை செய்யும் பொருட்டு இவ்விழாவிற்கு அழைத்தால் அதனை புறக்கணித்து, தோழர் நல்லக்கண்ணு தோழமையை என்ற ஒன்றை மறந்துவிட்டதாகவே கருதப்படுகிறது.
அரசியலில் கொள்கை சமசரம் இல்லாமல் பயணிக்க முடியாது என்று சொல்லியே மாறி மாறி கட்சிகளுடன் கூட்டணியில் பயணித்தவருக்கு ஒரு பத்திரிக்கையாளரின் அழைப்பை ஏற்க மட்டும் கொள்கை முன்னிற்று தடுத்து விட்டதோ? இன்றும் அவருக்கு வழங்கப்படும் இலவச வீடு கூட மாற்று சிந்தனை கொண்ட அரசுகளால் தான் வழங்கப்படுகிறது கொள்கை உறுதியோடு அதனை புறக்கணித்தாரா தோழர் நல்லக்கண்ணு என்ற கேள்விகள் மக்கள் மத்தியிலும் மற்றும் சமுக வலைதளங்களிலும் கேட்கப்பட்டு விவாதிக்கப்பட்டு வருகிறது.
ஒரு அழைப்பை ஏற்பதும், புறக்கணிப்பதும் அவரவர் விருப்பம், ஆனால் அதற்கு காரனாமாக கூறுவதை தான் ஏற்க முடியவில்லை, இத்துணை ஆண்டுகால அரசியலில் இதை தான் கற்றுக் கொண்டாரா அவர். ஒரு அழைப்பை புறக்கணிப்பதாக இருந்தால் கூட அதை நேர்மையோடும், பண்போடும் அணுகியிருக்க வேண்டும், அதை விடுத்து தோழர் நல்லக்கண்ணு அழைப்பாளரை அலட்சியபடுத்தி அசிங்கப்படுத்தி, அவமானப்படுத்தும் நோக்கோடு நடந்து கொண்டது அனைவரையும் முகம் சுழிக்க வைத்துள்ளது.
மிக முக்கியமாக இந்த விருதினை அறிவிக்கும் முன் அவரிடம் முன்பே தெரிவித்து அவரின் அனுமதியை பெற்ற அறிவித்தாக சொல்லப்படுகிறது, அப்படியானால் ஒப்புக்கொண்ட ஒரு விஷயத்தை பின் மாற்றிக்கொண்டு கொள்கை என்று கொடி பிடிப்பது கொஞ்சமும் நேர்மையற்ற மற்றும் பக்குவம் இல்லாத செயல் என்ற பலரும் விமர்சித்து வருகின்றனர்.
வயதில் மூத்தவர், பல ஆண்டுகால அரசியல் அனுபவம் கொண்டவர் என்றெல்லாம் புகழப்படும் நல்லக்கண்ணு வெறுப்பினை உமிழும் ஒருவராகவே இருக்கிறார் என்பதற்கு இதுவே சான்று. கம்யுனிச கொள்கைகள் யாவும் வெறுப்பினை சமுகத்தில் விதைக்கும் யுக்தியாகவே இருந்து வந்துள்ளது, அதிலும் சமய சந்தர்ப்பம் பார்த்து சமரசம் செய்து கொள்வதும், உறுதியோடு இருப்பதாக காட்டிக்கொள்வதும் அவர்களின் வழக்கம் என்பதை இந்நிகழ்ச்சி மீண்டும் ஒருமுறை உறுதி செய்துள்ளது.
தன்னுடைய கொள்கை என்று வெறுப்பினை தான் முன் நிறுத்துகிறாரா தோழர் நல்லக்கண்ணு. அரசியலில் பண்பு, நாகரீகம், நேர்மை மனிதம் என்பதையெல்லாம் மறந்துவிட்டாரா? தோழர் நல்லக்கண்ணுவிற்கு மற்ற குணங்கள் எதுவும் இல்லாவிட்டாலும் கூட குறைந்தபட்சம் மனிதத்தோடு நடந்து கொண்டிருக்கலாமே..! இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு அவருக்கு யார் மனிதம் போதிப்பது என்ற கேள்வி மக்கள் மனதில் எழுந்துள்ளது.