வளாக வேலைவாய்ப்பில் ஒரே ஆண்டில் சென்னை ஐ.ஐ.டி இப்படி ஒரு சாதனையா ?
By : Karthiga
சென்னை ஐ.ஐ.டி வளாகத்தில் ஒவ்வொரு வருடமும் வளாக வேலைவாய்ப்பு மூலம் அங்கு படிக்கும் மாணவ மாணவிகளுக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் 2021 -22 ஆம் கல்வி ஆண்டுக்கான வேலைவாய்ப்பு கடந்த சில மாதங்களாக நடந்து வந்தது.
அதன்படி இரண்டு கட்டமாக வேலைவாய்ப்புகள் நடத்தப்பட்டு இதன் மூலம் 380 நிறுவனங்களில் இருந்து 1,199 பேருக்கு பணி நியமனம் கிடைத்துள்ளது. மேலும் கோடை கால உலக பயிற்சியின் வாயிலாக 231 முன் வேலைவாய்ப்புகளும் கிடைத்துள்ளன.
ஏற்கனவே கடந்த 2018-2019 ஆம் கல்வி ஆண்டில் அதிகபட்சமாக கருதப்பட்ட 1,151 பணி நியமனங்கள் உடன் ஒப்பிடுகையில் இதுவரை இல்லாத வகையில் பணி நியமனங்களை சென்னை ஐ.ஐ.டி பெற்று சாதனை படைத்த இருக்கிறது 1,199 நிறுவனங்களிடம் இருந்து பெறப்பட்ட 45 சர்வதேச வேலைவாய்ப்புகளும் அடங்கும்.
அந்த எண்ணிக்கையிலும் சென்னை ஐ.ஐ.டி சாதனை முத்திரையை பதித்துள்ளது.2022-ம் ஆண்டுக்கான வேலைவாய்ப்பு களின் மூலம் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட சராசரி சம்பளம் ஆண்டுக்கு 21 லட்சத்து 48 ஆயிரம் ஆகும். இந்த பணி நியமனங்களில் அதிகபட்ச சம்பளமாக ஆண்டுக்கு ரூபாய் 1 கோடியே 98 லட்சத்து 90 ஆயிரத்து 450 ஆக உள்ளது.
தேர்வு செய்யப்பட்ட மாணவர்களில் 80 சதவீதம் பேர் நடப்பாண்டிலேயே பணிபுரிவதற்கு நியமனங்களை பெற்றிருக்கின்றனர்.
பணி நியமனம் பெற்றவர்கள் அதிகபட்சமாக அடிப்படை இன்ஜினியரிங் மற்றும் தொழில்நுட்பத் துறையில்தான் அதிகமானவர்கள் பணியில் சேர்ந்து இருக்கின்றனர்.
வேலைவாயப்புகள் வழங்கிய நிறுவனங்களின் வரிசையில் எக்ஸெல் சர்வீஸ் நிறுவனம் 28 வேலை வாய்ப்புகளையும் அடுத்ததாக ஓலா 27 வேலை வாய்ப்புகளையும் வழங்கி உள்ளது.