தேசிய அளவில் மணிக்கணக்கில் ட்ரெண்ட் ஆன #தத்திஸ்டாலின் - தமிழகத்தின் பப்புவானாரா மு.க.ஸ்டாலின்? #PappuStalin
தேசிய அளவில் மணிக்கணக்கில் ட்ரெண்ட் ஆன #தத்திஸ்டாலின் - தமிழகத்தின் பப்புவானாரா மு.க.ஸ்டாலின்? #PappuStalin
By : Kathir Webdesk
இந்தியாவில் "பப்பு" யார் என கேட்டால் சிறு குழந்தைக் கூட ராகுல் காந்தி என சொல்லி விடும். அந்த அளவிற்கு தன் கோமாளித்தனங்களால் ஒரு காமெடியனாக இன்று அவர் பார்க்கப்படுகிறார்.
அதேபோல, தமிழகத்திலும் மு.க.ஸ்டாலினும் ஒரு காமெடி பீஸாக தற்போது பார்க்கப்படுகிறார். எப்போது பேட்டி கொடுத்தாலும், அந்த பேட்டியை துண்டுச்சீட்டை பார்த்து படித்தாலும் பல பிழைகளை செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார். துண்டுச்சீட்டு இல்லாமல் பேசினால், கேட்கவே வேண்டாம், பழனிசாமியை நாராயணசாமி என்பதும், திருவள்ளுவரை பெரியார் என்பதும் என அவரது உளறல்கள் எல்லை மீறி சென்றுக் கொண்டு இருக்கிறது.
அதே போல, அசுரன் படம் பார்த்தால் வாயை வைத்து சும்மா இருக்காமல் பஞ்சமி நிலம் குறித்து வாய் விட்டு தற்போது முரசொலி அலுவலக விவகாரத்தை தெருவுக்கு எடுத்து விட்டுள்ளாரே என தி.மு.க மூத்த நிர்வாகிகளே முகம் சுளிக்கின்றனர். ஆக, மத்தியில் ஒரு ராகுல் காந்தியை போல், தமிழகத்துக்கு ஒரு ஸ்டாலின் என்று பரவலாக இணையத்தில் தற்போது பேசப்படுகிறது.
இந்நிலையில், நேற்று ட்விட்டரில் தேசிய அளவில் பல மணி நேரங்கள் #தத்திஸ்டாலின் என்ற ஹேஷ்டேக் ட்விட்டர் தளத்தில் ட்ரெண்ட் ஆகியுள்ளது. இது ஸ்டாலினுக்கு தமிழகத்தில் இருக்கும் கடும் எதிர்ப்பை பிரதிபலிப்பதாக உள்ளது.
இந்த ஹேஷ்டேக்கில் சில ட்வீட்கள்: