Kathir News
Begin typing your search above and press return to search.

இப்படியும் ஒரு தாய்மாமன் சீரா? காதணி விழாவிற்கு கிரேன் மூலம் 15 அடி உயர மாலை

வந்தவாசியில் காதணி விழாவிற்காக கிரேன் மூலம் 15 அடி உயர மாலையை எடுத்துச் சென்று தாய் மாமனை கண்டு அனைவரும் வியந்தனர்.

இப்படியும் ஒரு தாய்மாமன் சீரா? காதணி விழாவிற்கு கிரேன் மூலம் 15 அடி உயர மாலை

KarthigaBy : Karthiga

  |  24 July 2023 6:15 AM GMT

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த புன்னை கிராமத்தைச் சேர்ந்தவர் சாமி ஐயப்பன். இவரது அக்காக்கள் கணவருடன் சென்னையில் வசித்து வருகின்றனர். அக்காளின் குழந்தைகள் 3 பேருக்கு காதணி விழா வந்தவாசியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. இதை அடுத்த சாமி ஐயப்பன் தனது அக்காள் குழந்தைகளுக்கு தாய் மாமன் சீர்வரிசையை வித்தியாசமாக செய்ய முடிவு செய்தார். அதன்படி தாய்மாமன் சீர் கொண்டு செல்வதற்கு 15 அடி உயரத்தில் மாலை ஒன்று தயார் செய்து கிரேன் மூலம் ஊர்வலமாக எடுத்துச் சென்றார்.


வந்தவாசி ஈஸ்வரன் கோவிலில் இருந்து திருமண மண்டபம் வரை சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் ஊர்வலமாக சென்றார். மேலும் பின்னால் மேளதாளங்களுடன் டிராக்டர் டிரைலரில் மூன்று குழந்தைகளை அமர வைத்து 100க்கும் மேற்பட்ட பல்வேறு வகையான சீர்வரிசைகள் கொண்டு ஊர்வலமாக சென்றார். கிரேன் மூலம் எடுத்துச் சென்ற மாலையை சாலையில் செல்லும் பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றனர். இந்த சம்பவம் வந்தவாசி பகுதியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.


SOURCE:DAILY THANTHI

Next Story
கதிர் தொகுப்பு
Trending News